Friday, January 28, 2011

தமிழர்கள் அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல்வாதிகள்


தமிழர்கள் அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல்வாதிகள்

கருணாநிதி முதலமைச்சர் தெலுங்கர்

செயலலிதா எதிர்கட்சித் தலைவர் கன்னடர்

ஆற்காடு வீராச்சாமி அமைச்சர் தெலுங்கர்

கே.என். நேரு அமைச்சர் தெலுங்கர்

கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அமைச்சர் தெலுங்கர்

எ.வ. வேலு அமைச்சர் தெலுங்கர்

மு.க. ஸ்டாலின் அமைச்சர் தெலுங்கர்

துரைமுருகன் அமைச்சர் தெலுங்கர்

நெப்போலியன் மத்திய அமைச்சர் தெலுங்கர்

தயாநிதி மாறன் அமைச்சர் தெலுங்கர்

மு.க. அழகிரி அமைச்சர் தெலுங்கர்

வை.கோ. ம.தி.மு.க. தெலுங்கர்

விஜயகாந்து தே.மு.தி.க. தெலுங்கர்

திருமதி விஜயகாந்து தே.மு.தி.க. தெலுங்கர்

சதீஸ் (விஜயகாந்தின் மச்சான்) தே.மு.தி.க. தெலுங்கர்

வரதராஜன் மாக்சியக் கம்யூ தெலுங்கர்

தங்கபாலு காங்கிரசுக்கட்சி தெலுங்கர்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரசுக் கட்சி கன்னடர்

கி. வீரமணி தி.க. தெலுங்கர்

விடுதலை ராசேந்திரன் பெ.தி.க. தெலுங்கர்

கோவை ராமகிருஷ்ணன் பெ.தி.க. தெலுங்கர்

கவிஞர் தாமரை //// கன்னடர்

கவிஞர் அறிவுமதி //// தெலுங்கர்

பேராசிரியை சரஸ்வதி நாம் தமிழர் கட்சி தெலுங்கர்

திருச்சி வேலுச்சாமி நாம் தமிழர் கட்சி தெலுங்கர்

கிருஷ்ணசாமி புதிய தமிழகம் தெலுங்கர்

வெங்கட்ராமன் தமிழ் தேசியப் பொதுவுடமைக் கட்சி தெலுங்கர்

அதியமான் ஆதித் தமிழர் பேரவை கன்னடர்

கார்முகில் மா.லெ. கட்சி தெலுங்கர்

ஞானதேசிகன் காங்கிரசுக் கட்சி தெலுங்கர்
நடுவணரசை ஆட்டிப் படைக்கும் மலையாளிகள்!


என். பெர்னான்டஸ் -ஜனாதிபதியின் செயலாளர்,
வி.கே.தாஸ் -ஜனாதிபதியின் தனிச் செயலாளர்,
டி.கே.ஏ. நாயர் -பிரதமரின் முதன்மைச் செயலாளர்,

என்.நாராயணன்-பிரதமரின் பிரதான ஆலோசகர்,
பி.ஸ்ரீதரன்-நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர்,
கே.எம். சந்திரசேகர் -அமைச்சரவைச் செயலாளர்,

ருத்ர கங்காதரன்- விவசாயத் துறைச் செயலாளர்,
மாதவன் நம்பியார் -விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர்,
நிருபமா மேனன் ராவ் -வெளியுறவுத் துறைச் செயலாளர்,

சத்தியநாராயணன் தாஸ்-கனரகத் தொழில்துறைச் செயலாளர்,
ஜி.கே.பிள்ளை -உள்துறைச் செயலாளர்,
சுந்தரேசன் -பெட்ரோலியத் துறைச் செயலாளர்,

கே.மோகன்தாஸ் -கப்பல் துறைச் செயலாளர்,
பி.ஜே.தாமஸ் -மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர்,
சிவசங்கர் மேனன் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர்,

சுதா பிள்ளை -திட்டக் கமிஷன் செயலாளர்,
வி.கே.சங்கம்மா -வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர்,
ஆர். கோபாலன் -நிதிப் பணிகள்துறை இயக்குநர்,

கே.பி.வி.நாயர் -செலவீனங்கள் துறைச் செயலாளர்,
கே.ஜோஸ் சிரியாக் -வருவாய்த் துறைச் செயலாளர்,
ஆர்.தாமஸ் -வருமான வரித்துறைச் செயலாளர்,

வி.ஸ்ரீதர்- சுங்கத் துறைச் செயலாளர்,
பி.கே.தாஸ் -அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர்,
ஏ.சி.ஜோஸ்-கதர் வாரியம்,

சி.வி.வேணுகோபால் -பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர்,
ஸ்ரீகுமார் -இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்.
பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியாக செயல்படும் மூத்த அதிகாரி

கோபாலகிருஷ்ணன். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.
கே.எம். சந்திரசேகர்- அமைச்சரவைச் செயலாளர்
சி.கே. பிள்ளை - உள்துறைச் செயலர்

நந்த குமார் - கூட்டுறவுத்துறைச் செயலாளர்
பி.கே. தாமஸ் - தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலர்
செய்தி ஒலிபரப்புத் துறை செயலாளர் ரகு மேனன்,

நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் ராமச்சந்திரன்,
ஜவுளிச் துறை செயலாளர் ரீட்டா மேனன்,
கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர் கங்காதரன்,

குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர்,
சட்டத்துறை செயலாளர் விசுவநாதன்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மாதவன் நாயர்

நமது நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 543 பேரில் 20 பேர்தான் கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள். அதிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் 15 பேர்தான். ஆனால், இவர்களில் அமைச்சர்களாக இருப்பவர்கள் ஐந்து பேர். அவர்கள்:

ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி,
வெளிவிவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி,
விவசாயத் துறை இணையமைச்சர் கே.வி. தாமஸ்,
உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்,
ரயில்வேத் துறை இணையமைச்சர் ஈ.அகமது

வெளிவிவகாரத்துறை இணையமைச்சராக இருந்து பதவி விலகிய சசி தரூரையும் சேர்த்தால் ஆறுபேர்!


சோனியா வீட்டிலும் ஆட்டிப் படைப்பவர்கள் மலையாளிகள்தான். சோனியாவின் ஓட்டுனர் ரவீந்திரன், சமையல்காரர் அங்கம்மா அங்கணங் குட்டி, தோட்டக்காரர் தாமஸ், சந்தைக்குப் போய் வருபவர்கள், சமையல் உதவியாளர்கள், தோட்டப் பராமரிப்பு உதவியாளர்கள் என்று எல்லாருமே மலையாளிகள்தான். அதேபோல, சோனியா காந்தி வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக தில்லிக் காவல்துறையினர் அறுபது பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஐம்பது பேர் கேரளாக்காரர்கள். இப்படி நாட்டின் பிரதான நிர்வாக இடங்கள் அனைத்திலும் கேரளக்காரர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச்சிறிய மாநிலம் கேரளா. ஆனால் மத்திய அரசுத் துறை செயலாளர்கள் 53 பேரில், 19 பேர் அதாவது 33 விழுக்காட்டிற்கு மேலானவர்கள் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் என்று கணக்குச் சொல்லப்படுகிறது


தலித் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதா?





தேர்தல் நெருக்கத்தில் அரசியல் களம் சூடுபிடித்திருக்கும் இந்த வேளையில் புதிதாய் எழுந்துள்ள ஒரு சர்ச்சை கவனத்திற்குள்ளாகி இருக்கிறது. தலித் மக்களின் திட்டங்களுக்கான நிதியை வேறு திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு திருப்பி விட்ட்து என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடந்த அக்டோபர் நவம்பர் மாதங்களில் சென்னை நகரில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வாழும் 31 பகுதிகளில் கள ஆய்வு நடத்தியது. “சென்னை நகரின் விரிவாக்கங்கள் எந்த வகையிலும் தலித் மக்களை எட்டவில்லை. தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 19 சதவீதம் தலித் மக்கள் ஆனால், சென்னையில் தலித்மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மக்கள்த்தொகை கணக்கெடுப்பிலும் குறைந்துகொண்டேயிருக்கிறது. சென்னைநகரின் உள்கட்டமைப்பு பணிகளுக்காக சென்னையிலிருந்து தலித் மக்கள் வெளியேற்றப்படுவதைத்தான் இப்புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மீதமுள்ளவர்கள் கூவம், பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு போன்றவற்றின் கரைகளில்தான் பெரும்பாலான தலித் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களுக்கென்று குடிநீர், கழிப்பறை, சாக்க்டை போன்ற அடிப்படை வசதிகள் கிடையாது. தலித் மக்களுக்கென்று கடந்த 38 ஆண்டுகளில் 72000 வீடுகள் மட்டுமே தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டித்தரப்பட்டுள்ளன. 2003ல் “குடிசையில்லா சென்னை” என்கிற இலக்கை தமிழ்நாடு அரசு அறிவித்த்து. ஆனால் தலித் மக்களுக்கு வீடுகள் கட்டித்தராமல் அவர்களை மாநகர எல்லையிலிருந்து வெளியேற்றுவதே நோக்கமாக இருக்கிறது. இவர்களுக்கான சிறப்பு உட்கூறு திட்டத்தில் ரூ.3,821 கோடி நிதி செலவிடப்பட்டதாக முதலமைச்சர் கூறுகிறார். அந்த நிதியிலிருந்து இவர்களது வீடுகள் ஏன் புதுப்பிக்கப்படவில்லை? அந்த நிதி வேறு திட்டங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதையே இது காட்டுகிறது.” என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி குற்றம்சாட்டுகிறது.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையின்படி ஒவ்வொரு நூறு ரூபாயிலும் 19 ரூபாய் தலித் மக்களுக்கென செலவிடப்படுவதாக கணக்கிருக்கிறது. இதுவும் கூட 31 ஆண்டு கால தலித் மக்களின் போராட்டத்திற்குப் பிறகே சாத்தியமானது. ஆனால் நடைமுறையில் இவை இல்லை.
நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்ப்டும் நிதி தலித் மக்களுக்குச் சென்று சேர்வதை உத்தரவாதம் செய்யும் வகையில் 1979ல் ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தில் மத்திய அரசின் சிறப்புக்கூறு திட்டம் (ஸ்பெஷல் காம்பொன்ண்ட் ப்ளான்) உருவாக்கப்பட்டது. பின்னர் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இதன் பெயர் ஷெடியூல்டு சாதியினருக்கான சப்-பிளான் (Scheduled Caste Sub-plan) என்று மாற்றப்பட்டது. இத்திட்டம் உருவாக்கப்பட்டதன் அடிப்படை நோக்கமே, ஒரு நூறு பேர் கொண்ட கிராமத்தில் இருபது தலித் மக்கள் இருந்தால் அக்கிராமத்திற்கு செலவிடப்படும் தொகையில் ஒவ்வொரு நூறு ரூபாயிலும் இருபது ரூபாய் தலித் மக்களுக்குச் சென்று சேரவேண்டும் என்பதை உத்தரவாதப்படுத்துவதே. ஆகவே தமிழ்நாட்டில் 19% சதவிகித தலித் மக்கள் இருப்பதால் செலவு செய்யப்படும் ஒவ்வொரு நூறு ரூபாயிலும் பத்தொன்பது ரூபாய் தலித் மக்களுக்குச் சென்று சேர வேண்டும்.

மத்திய அரசில் 55 செக்டார்களும், 105 துறைகளும் உள்ளன. அதுபோலவே தமிழ்நாடு அரசின்கீழ் 18 செக்டார்களும், 48 துறைகளும் உள்ளன. ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கையில் மத்திய மனித வள மேம்பாட்டு, மின்சாரம், போக்குவரத்து, பெட்ரோலியம், கிராமப்புற மேம்பாடு போன்ற துறைகள் பாதிக்கும் மேற்பட்ட நிதியை எடுத்துக்கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, 2010-11 பட்ஜெட்டின் மொத்த்த் தொகை 5.25 லட்சம் கோடி ரூபாய் இதில் 2.75 லட்சம் கோடி ரூபாயை மேற்சொன்ன துறைகளே எடுத்துக்கொண்டன.

தமிழ்நாட்டிலும் மின்சாரம், குடிநீர், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை ஆகிய ஐந்து அமைச்சகங்களே ஐம்பது சதவிகித நிதியைப் பெறுகின்றன. இருபதாயிரம் கோடி ரூபாய் தமிழக பட்ஜெட்டில் 11000 கோடி ரூபாயை இத்துறைகளே எடுத்துக்கொண்டன. மத்தியிலும், தமிழ்நாட்டிலும் இந்த்த் துறைகளே தலித் மக்கள் வாழும் பகுதிகளுக்கான வளர்ச்சித்திட்டங்களுக்குப் பொறுப்பேற்பவை. தலித் மக்களுக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்படும் தொகை (divisible expenditure), பொது நிதியிலிருந்தும் பயன் பெறும் தலித்மக்களுக்கான தொகை (Indivisible expenditure) என்று தொகையை இரண்டுவிதமாகப் பிரிக்கலாம்.

தமிழ்நாட்டிலுள்ள ஆதிதிராவிடர் நலத்துறையே தலித் மக்களுக்கான நலத்திட்டஙக்ளை செயல்படுத்தும் பொறுப்பிலிருக்கிறது. ஆகவே மற்ற துறைகள் எடுத்துக்கொள்ளும் நிதி தலித் மக்கள் பகுதிகளுக்கும் சென்று சேர்கிறதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு இத்துறைக்கு உண்டு. ஆனால் அப்படிப்பட்ட கண்காணிப்பு எதுவும் நடைபெறுவதில்லை.

கலைஞர் காப்பீட்டுத் திட்டம், கலைஞர் வீட்டு வசதித்திட்டம் ஆகியவை பொது நிதியிலிருந்துதான் நடைமுறைப்ப்டுத்தப்படுகின்றன. இதுபோன்ற பொதுநிதியிலிருந்து செயல்படுத்தப்படும் திட்டங்களையெல்லம் தலித் மக்களுக்கான நிதியான ஷெடியூல்டு சாதியினருக்கான சப்-பிளானின் கீழ் வருவதாக்க் காட்டப்படவிருக்கின்றன. ஆனால் இந்த்த் திட்ட்த்தால் பயன்பெறுவது தலித் மக்கள் மட்டுமல்ல. எனவே இது தலித் மக்களுக்கான நிதியை மற்றவர் பயன்படுத்த அனுமதிப்பது சரியல்ல. விதவை பென்ஷன், வேலையற்றோருக்கான உதவித்தொகை,மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் திருமண உதவித்திட்டம் போன்றவையும் ஷெடியூல்டு சாதியினருக்கான சப்-பிளானின் கீழ் கணக்கு காட்டப்ப்டுகின்றது. இத்திட்டங்களின் கீழ் பயன்பெறுபவர் அனைவரும் தலித் மக்கள் அல்ல. தலித் அல்லாதோரும் இத்திட்டங்களினால் பயன்பெறும்போது இப்படி செய்வது சரியா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி.

தமிழக அரசின் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் தமிழரசியோ ”மற்ற அரசாங்கங்களை விட தி.மு.க. அரசு தலித் மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துகிறது. அவர்களுடைய நிதி வேறெதற்கும் பயன்படுத்தப்படவில்லை” என்று நாளிதழ்களுக்கு பேட்டியளித்திருக்கிறார்.
கரகாட்டக்காரன் பட்த்தில் வரும் வாழைப்பழ காமெடி போல, தலித் மக்களுக்கான திட்டங்கள் எங்கே என்று கேட்டாலும் இவைதான் என்றும், பொதுத்திட்டங்களும் இவைதானென்று தமிழ்நாடு அரசு சொல்கிறது.

இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை விட தலித் மக்களுக்கான நலத்திட்டங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே அதிகமிருக்கின்றன. இந்தப் பெருமையைப் பெற்றிருக்கும் தமிழ்நாடு அரசு இந்தக் களங்கத்தைப் போக்கி தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தடுக்க வேண்டும் என்பதே இப்போதைய கோரிக்கையாக இருக்கிறது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் பி. சம்பத் தலித்துகளுக்கான நிதியை பயன்படுத்த அரசுக்கு சில ஆலோசனைகளை சொல்கிறார்:

தலித்துகளுக்கான நிதியை அரசு பயன்படுத்த சில ஆலோசனைகள் சொல்கிறோம். அரசு கட்டிக்கொடுத்த ஆதிதிராவிடர் குடியிருப்புகளெல்லாம் மிக மிகப் பழசாகி எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் இருக்கின்றன. இவற்றையெல்லாம் பழுது பார்க்கலாம் அரசு. அல்லது புது வீடுகள் கட்டிக்கொடுக்கலாம். புதுச்சேரியில் தலித் மாணவர்க்ளின் மேற்படிப்பிற்கான செலவுகளை அம்மாநில அரசே ஏற்றுக்கொள்கிறது. அத்திட்ட்த்தை இங்கும் நடைமுறைப்படுத்தலாம். இதன்மூலம் முதல் தலைமுறை மாணவர்க்ளுக்கு பயன்பெறும் வித்த்தில் அத்தொகையை செலவு செய்யலாம்.

ஆதிதிராவிட மாணவர்களுக்கான விடுதிகள் எல்லாம் மிக மோசமான நிலையில் இருக்கின்றன. சென்னையில் உள்ள எம்.சி.ராஜா விடுதிக்குச் சென்று பார்த்தபோது அங்கு கண்ட காட்சிகள் மிக்க்கொடுமையானதாக இருந்த்து. ஒரு அரசு மருத்துவமனையின் பிணக்கிடங்கு போலிருக்கிறது. இதை நான் மிகையாகச் சொல்லவில்லை. யார் வேண்டுமானாலும் போய்ப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். மாணவர்களுக்கு குளியலறை கூட இல்லை. வெளியே பொதுஇட்த்தில் ஆளுக்கொரு புறத்தில் நின்று குளிக்கிறார்கள். 8 பேர் மட்டுமே தங்க முடிந்த அறையில் பதினெட்டு பேர் இருபது பேர் என்று தங்குகிறார்கள். இந்த அடிப்படை வசதிகளை எல்லாம் உருவாக்கலாம்.

தலித் குடியிருப்புகளுக்கு வேண்டிய சாக்கடைக் குழாய்கள் அமைத்தல், சாலைகள் அமைத்தல் என்று அடிப்படை வ்சதிகளை அமைக்கலாம். தலித் பகுதிகளில் இரவு பாடசாலைகள் அமைக்கலாம்.
மலம் அள்ளும் தொழிலில் இன்னும் மனிதர்கள் ஈடுப்ட்டுக்கொண்டுதானே இருக்கிறார்கள். ஒரு தொண்டு நிறுவனம் அளித்துள்ள புள்ளிவிவரத்தின்படி ஐம்பதாயிரம் பேர் தமிழ்நாட்டில் இன்னும் இந்த பணியைச் செய்கின்றனர். ரயில்வே டிராக்குகளில், பொதுக்கழிப்பிடங்களில், நிறைய மக்கள் கூடும் ஊர்த்திருவிழாக்களில் என்று எத்த்னையோ இடங்களில் மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலம் தொடர்கிறது. இதனை ஒழிப்பதற்கு திட்டங்கள் தீட்டலாம். அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்கலாம். கைரிக்‌ஷா ஒழிக்கப்பட்ட்து போல இதையும் ஒழிக்கலாம்.

அரசு வேலையில் துப்புரவு பணியாளர்களாக தலித்தல்லாதவர்களும் நியமிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் இந்த வேலை செய்வதில்லை. அதிகாரிகளும் இவர்களுக்கு ஆபீஸ் அட்டெண்டர், எல்க்ட்ரிஷியன், ஓட்டுனர் என்று அவர்களுக்குத் தெரிந்த வேறு வேலைகளுக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவுட் சோர்ஸிங் செய்வது போல இவர்களிட்த்தில் ஒரு தலித்தை அழைத்து வந்து கொஞ்சம் பணம் கொடுத்து துப்புரவு பணியை செய்ய வைத்து ஊதியத்தை மட்டும் இவர்கள் பெற்றுக்கொள்கின்றனர். இப்படியான அநியாயங்களை களைய நடவடிக்கை எடுக்கலாம்.

நிறுவன தலைவர், சமூக சமத்துவ மக்கள் படையின் நிறுவன தலைவர் சிவகாமியிடம் பேசியபோது
”அரசு 3800 கோடி ரூபாய் தலித் மக்களுக்கென்று செலவிட்டிருப்பதாக்க் கூறுகிறது. ஆனால் எந்தெந்த வகையில் அவற்றை செலவு செய்தது என்கிற விவரம் தெரிவிக்கப்படவில்லை. மின்சார இணைப்புகள், சாலைகள் அமைப்பது போன்ற உள்கட்டுமானப் பணிகள் தலித் மக்களின் நலனையும் உள்ளிட்டவைதான் என்றால் மின்சாரத்தை பயன்படுத்தும்படியான வீடுகள் முதலில் தலித்துகளுக்கு இருக்கிறதா என்பது ஒரு கேள்வி. அடுத்து இவர்கள் போடும் நால்வழிச்சாலை போன்றவற்றால் தலித் மக்கள பயன்படுத்தும் நிலையில் இருக்கிறார்களா என்பது இன்னொரு கேள்வி. விவசாயத்திற்கு தேவைப்படும் நீர்ப்பாசனத்திற்கு செலவு செய்த்தாக எடுத்துக்கொண்டால், எத்தனை தலித்துகள் விவசாய நிலம் வைத்திருக்கிறார்கள்? அதற்காக செலவிடப்படும் நிதி எப்படி தலித் மக்களை சென்றடைந்த்தாகச் சொல்ல முடியும்? அப்படியிருக்கையில் அரசின் இந்த அறிவிப்பு ஒரு மோசடி என்றே கருதவேண்டியிருக்கிறது. எந்தெந்த திட்டங்களுக்கு நிதி போனது, அந்த்த் திட்டங்கள் தலித்துகளுக்கு எந்த வகையில் நன்மை செய்த்து, இந்த விஷயங்கள் ஒழுங்காக நடக்கின்றனவா என்பதைக் கண்காணிக்க என்ன வழிமுறை – இந்த மூன்று கேள்விகளுக்கும் விடையில்லாதபோது தலித் மக்களின் நிதி மடைமாற்றப்பட்டதாகவே அர்த்தம்” என்றார்.

நன்றி: புதிய தலைமுறை

Saturday, January 22, 2011

ஆன்மீகத்திருட்டு

அத்தியாவசிய பொருட்கள் ,உணவு பண்டங்கள் ,நாணயம் இவைகளை பதுக்குவது எத்தகைய குற்றமோ அப்படி இந்திய கோவில்களில் யாருக்கும் பயன்படாமல் குவித்து அல்லது பதுக்கி வைத்திருக்கும் தங்கம் ,வைரங்களை ,பொருட்கள் பதுக்கல் சட்டத்தின் கீழ் கைப்பற்றி இந்திய குடிமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய அரசு முன்வரவேண்டும் .சிதம்பரம் ,திருப்பதி ,ஸ்ரீபுரம் உள்ளிட்ட கோவில்களில் தங்கக்கூரையாக தேங்கிக்கிடக்கும் தங்ககுவியல்களை மீட்டு எடுத்து இறைவனின் குழந்தைகளான மக்களின் பசி பஞ்சத்தை துடைத்தெரிவதன் மூலமே இந்த அரசு அந்த இறைவனை திருப்தி செய்ய முடியும் .ஆதி அந்தம் இல்லாத அநாதியான இறைவனை தங்ககோபுரதுக்குள் அடக்க நினைக்கும் அறியாமையை நினைத்து அந்த இறைவனும் விழுந்து விழுந்தே சிரிப்பான் .தகப்பன் சொத்து பிள்ளைக்கு தானே ,இறைவனான தந்தையின் தங்ககோபுரத்தை ,அவரின் பிள்ளைகள் வளர்ச்சிக்கு பங்கிட்டு கொடுக்காத சுயநல மனிதர்களை கண்டு இறைவன் சிரித்து பின் எரிக்கத்தான் செய்வான் .உலகியற்றியை சாந்தப்படுத்த உடனே அதை இல்லாதவர்க்கு பகிர்ந்தளிக்க ,ஏழை எளிவோரின் துயர் துடைக்க ,இந்தியாவை வல்லரசாக்க பயன் படுத்துக .

Wednesday, January 5, 2011

Sunday, January 2, 2011

பாபர்மசூதி வழக்கின் தீர்ப்பு முஸ்லீம்களுக்கு நீதி செய்யுமா? -

பாபர்மசூதி வழக்கின் தீர்ப்பு முஸ்லீம்களுக்கு நீதி செய்யுமா? -

புலிகளுக்கு எதிரான போரின்போது இலங்கைக்கு, இந்தியா வழங்கிய ஆயுத உதவிகள் - TamilWin.com

புலிகளுக்கு எதிரான போரின்போது இலங்கைக்கு, இந்தியா வழங்கிய ஆயுத உதவிகள் - TamilWin.com

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: தலைவர்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: தலைவர்