Saturday, January 22, 2011

ஆன்மீகத்திருட்டு

அத்தியாவசிய பொருட்கள் ,உணவு பண்டங்கள் ,நாணயம் இவைகளை பதுக்குவது எத்தகைய குற்றமோ அப்படி இந்திய கோவில்களில் யாருக்கும் பயன்படாமல் குவித்து அல்லது பதுக்கி வைத்திருக்கும் தங்கம் ,வைரங்களை ,பொருட்கள் பதுக்கல் சட்டத்தின் கீழ் கைப்பற்றி இந்திய குடிமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய அரசு முன்வரவேண்டும் .சிதம்பரம் ,திருப்பதி ,ஸ்ரீபுரம் உள்ளிட்ட கோவில்களில் தங்கக்கூரையாக தேங்கிக்கிடக்கும் தங்ககுவியல்களை மீட்டு எடுத்து இறைவனின் குழந்தைகளான மக்களின் பசி பஞ்சத்தை துடைத்தெரிவதன் மூலமே இந்த அரசு அந்த இறைவனை திருப்தி செய்ய முடியும் .ஆதி அந்தம் இல்லாத அநாதியான இறைவனை தங்ககோபுரதுக்குள் அடக்க நினைக்கும் அறியாமையை நினைத்து அந்த இறைவனும் விழுந்து விழுந்தே சிரிப்பான் .தகப்பன் சொத்து பிள்ளைக்கு தானே ,இறைவனான தந்தையின் தங்ககோபுரத்தை ,அவரின் பிள்ளைகள் வளர்ச்சிக்கு பங்கிட்டு கொடுக்காத சுயநல மனிதர்களை கண்டு இறைவன் சிரித்து பின் எரிக்கத்தான் செய்வான் .உலகியற்றியை சாந்தப்படுத்த உடனே அதை இல்லாதவர்க்கு பகிர்ந்தளிக்க ,ஏழை எளிவோரின் துயர் துடைக்க ,இந்தியாவை வல்லரசாக்க பயன் படுத்துக .

3 comments:

kadavulillai kadiravan said...

பொருளாதார பயன்பாட்டைபற்றி கூறி உள்ளீர்கள். மகிழ்ச்சி. செய்ய வேண்டியதுதான். ஆனால், இன்னமும் பார்ப்பனர்கள் நீதிமன்றத்தின் துணையுடன் கருவறையில் தீண்டாமையை கடைபிடிக்கிறார்களே. பார்ப்பனர்களுக்கு கீழாக தாங்கள் உள்ளதைப்பற்றி கவலைப்படாமல், ஏதோ தாங்களே ஜாதியால் உயர்ந்தவர்கள் என்று எண்ணிக்கொண்டு தங்களுக்கு கீழே உள்ளவர்களை அழுத்தக்கூடியவர்களும் இருக்கிறார்களே! பாவேந்தர் சொல்வதுபோல் ஜாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே! இருட்டறையில் உள்ள நிலை முழுமையாக மாற வேண்டும். அறிவியல் கருவிகளைக்கொண்டே மூடத்தனங்களை பரப்புகிறார்களே. அய்யா சொல்வதுபோல் அறிவுப்புரட்சி ஏற்பட வேண்டும். சமுதாயப்புரட்சி ஏற்படவேண்டும்.

guna said...

wrong thoought
go to rich people blackmoney

veera balu said...

kalluku etharku thangamum vairamum .

Post a Comment