Monday, July 18, 2011

பறக்கும் கார்

காமிக்ஸ் புத்தகங்களிலும் , ஜேம்ஸ் பான்ட் கதைகளிலும் கற்பனையாக சொல்லப்பட்ட பறக்கும் கார் , இப்பொழுது Terrafugia  என்கிற பெயரில் நிஜத்திலேயே வந்துவிட்டது .ஜூலை 18 ம் தேதி லண்டன் நகரில் பரிசோதித்து வெற்றிகண்ட இந்த காரில் இரண்டு பேர் பயணிக்கலாமாம் . , இன்னும் அய்ந்தாண்டுகளில் வழகத்திற்கு , சாதாரண பயன்பாடிற்கு வந்துவிடுமாம் . இதன் விலை $250,௦௦௦    என
                                                                  தற்பொழது நிர்ணயம் செய்ய பட்டுள்ளதாம் .

Friday, July 15, 2011

சீனாவில் தோன்றிய கடல் கன்னி

    
சீனாவில் உள்ள கடல் கரை ஒன்றில் கடல் கன்னி ஒருவர் சில வாரங்களுக்கு முன் தோன்றி இருந்தார் என்று இணையங்களில் படங்களுடன் பரபரப்பான செய்தி வெளியாகி உள்ளது.


ஆயினும் இது உண்மையிலேயே கடல் கன்னியின் உருவம்தானா? அல்லது பம்மாத்து வேலையா? என்பதை உறுதிப்படுத்த முடியாது உள்ளது.


படங்களை பார்த்து நீங்களே முடிவு எடுங்கள்.















Monday, July 4, 2011

முக நூலுக்கு போட்டியாக கூகுள் பிளஸ்

உலகம் உள்ளங்கையில் என்பதும் மாறி விரல் நுனியில் வந்துவிட்டது , இன்றைக்கு வெளிவருகிற எல்லா செல் போன்களிலும் சமூக வலைதலங்கலான FACE BOOK , MY SPACE ,TWITTER ஆகியவற்றிற்கு நேரடியாக பதிவேற்றம் செய்கிற அளவுக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன .இன்றைக்கு பெரும்பாலானோர் முக நூலை தனது நேரடி நிமிடாந்திர தொடர்புக்கான கருவியாய் பயன்படுத்துகின்றனர் .இத்தனை முக்கியத்துவம் பெற்ற FACE புக் ற்கு போட்டியாய் கூகுள் ஆண்டவர் எனப்ப்படும் நிறுவனம் முக நூலை போன்ற சமூக வலைத்தளம் ஒன்றை கட்டமைத்து வருகிறது " கூகுள் பிளஸ் " என்கிற பெயரில் .மிக விரைவில் வெளி வர இருக்கிற கூகுள் பிளஸ் இனைய உலகில் குறிப்பாக சமூக வலைதள உறவில் பெரிய மாற்றத்தை கொணரும் என்பதில் சந்தேகமே இல்லை


.https://plus.google.com/102444197181454403304/posts/Br6RAGPbA1M#102444197181454403304/posts/Br6RAGPbA1M