Thursday, November 18, 2010

கடவுளரின் கதைகள்


பிரம்மன் உருவான கதை…..


shri_krishna_stuti_by_lord_brahma_from_shrimad_or81

சாவித்திரி, சரஸ்வதி, காயத்திரி. இந்த மூவருக்கும் மணாளன் பிரம்மன்.
தன்னைப்படைத்த சிவனிடம் போய் ‘உன்னைப் படைத்தவன்’ நானடா! என்று வீரம்பேசியிருக்கின்றான் இவன். ‘அஞ்சு தலைப் பேர்வழியே அஞ்சாமல், ஆராயாமல் என்ன வார்த்தையடா சொன்னாய்?’ என்றவாறு ஒரு தலையைக் கிள்ளி உதறினான் சிவன்;
மிகுந்ததுதான் நான்கு தலைகள்.
விநாயகனின் மனைவிகளாகக் கூறப்படும் சித்தி, புத்தி இரு வரும் இவனது இன்பப்பாய்ச்சலின் இளம்பயிர்கள் -அதாவதுமகள்கள்.
நடனமாடும் நாரீமணி ஒருத்தி; அவள் பெயர் உருப்பசி. அவளது நடனத்தைப் பார்த்த பிரமனுக்கு பசி உருவானது. அருகில் வர ஆணையிட்டாள். அவள் ஆட்டம் ஓய்ந்து, இவன் ஆட்டம் துவங்கியது.
துள்ளல் – துவளலாய் மாறியதும், சிந்திச் சிதறிய விந்துத் துளிகளைத் திரட்டி, குடம் ஒன்றில் அடைத்தான் பிரம்மன். அக் குடத்தின் விந்து அகத்தியன் என்னும் ஆளாக மாறியது.
அசுவமேத யாகத்தை ஒருமுறை செய்தான். யாகத்தை வேடிக்கை பார்க்கத் தேவர்களின் பத்தினிகளும் வந்திருந்தனர். அந்த அழகிகளின் அழகில் கிளர்ச்சியுற்ற பிரம்மன், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாதவனானான். வீரியம் பீறிட்டடித்தது. அக்கினிக் குழியில் அந்த விந்துப் பெருக்கினை வார்த்தான். இதிலிருந்து பிறகு, ஆங்கீரசர், அத்ரி, மரீசி, புலஸ்தியர், புலகர் மற்றும் வசிட்டர் ஆகிய தவசிரேஷ்டர்கள் உதித்தனர்.
மாரீசன் என்பவனுக்கு ஆறு பிள்ளைகள் . இந்த ஆறு பிள்ளை களும் சரியான சுட்டிப்பயல்கள். பெற்ற மகளைப் பெண்டாண்ட பெரியவன் என்று இந்தச் சுட்டிப்பயல்கள் பிரம்மனுக்குச் சூடு கொடுத்தனர்; கைகொட்டிச் சிரித்தனர். எரிச்சலுற்ற பிரம்மன், “அசுரர்
களாவீர்”எனச் சாபந்தந்து கோபந்தணிந்தான்.
திலோத்தமையைப் படைத்ததும், மோகங்கொண்டு அவளை விரட்டினான். பிடிபடாமல் ஓடினாள் திலோத்தமை. பிரம்மன், அவளைப் பிடித்தானா? நினைத்த கதையை முடித்தானா என்பதன் தகவல்கள் கிடைக்கவில்லை.
சரஸ்வதியுடன் ஒருமுறை ஊடல்கொண்ட பிரம்மன், “பூமியில் பிற புலவனாய்ப் பிழை”எனச் சாபங்கொடுத்தான். அதுவும் ஒரு உருவில் அல்ல ; நாற்பத்தெட்டு உருவில். இந்த நாற்பத்தெட்டு உருவங் கள் தான் சங்ககாலப் புலவர்களாம்.
இதுபோல் 68 செய்திகளைத் தாங்கித் தருகிறது அபிதான சிந்தாமணி யின் 1133ஆம் பக்கமும், அதன் பக்கத்துப் பக்கங்களும்.
பக்திப் பழங்கள், சிந்தனைக்குச் சில நிமிடங்களை ஒதுக்க, சில கேள்விகள்;
1) மூவரை மணந்தவன் கடவுள், இதிலும் யோக்கியத்தனம் யோசித்தாலும் புலப்படவில்லை . ஏகபத்தினி விரதத்தை ரு கடவுளே ஏப்பம் விடலாமா?
2) படைத்தவனிடம் போய், வாய் நீளம் காட்டி தலை ஒன்றை
பறிகொடுத்தவன் பிரம்மன். இவனைக் கும்பிட்டு எதைச்
சாதிக்க இயலும் என்று கருதுகிறீர்கள்? தன் தலையைத் தந்து
விட்டுத் தவித்துத் துடித்தவன், பக்தர்கள் ஆசையை எப்படிப்
பூர்த்தி செய்வான்?
3) அழுக்கில் பிறந்த ஒரு ஆபாசக் கடவுளுக்குச் சித்தி, புத்தி
மூலம் மாமனாய்ப் பிரம்மன் மாறியதுபோல் -கைகாலற்ற
அவலட்சண ஆண் பிள்ளைகளுக்கு மாமன் பட்டம் சுமக்க,
பிரம்மனின் பின்னோடிகள் பின் வாங்காதிருக்க முடியுமா?
4) நடனமாடுவளைப் பார்த்து, நாக்கில் எச்சில் வடித்த இரண்டாம்
நிலை ரசனைக்காரனின் பக்தர்களே!
அண்மையில் ஆகிவந்த “டெஸ்ட் ட்யூப் பேபி”க்கு (சோதனைக் குழாய்க் குழந்தை) பிரம்மனின் குடத்துக் குழந்தைதான் (அகத்தியன்) கண்டுபிடிப்புக் கரு எனப் பீற்றிக்கொள்ளுங்களேன்.
ஆகாய விமானத்தின் ஆதாரமெல்லாம் தஞ்சை சரஸ்வதி
மகாலின் ஏட்டுச் சுவடித் தகவல் எனத் தம்பட்டம் அடிக்கும்
கூட்டத்திற்கு இதுவும் ஒரு பிடிப்புத்தானே! வெட்கங்
கெட்டவர்களே!
5) யாகத்திற்கு வந்த அயலானின் பத்தினிகளைப் பார்த்த
மாத்திரத்தில் ‘ஸ்வப்பன ஸ்கலிதம்’ கூட இல்லை; விழித்த
நிலையிலேயே விந்தை கழித்துக் கட்டுபவன் தான் கடவுளோ?
இதைத் தீயில் வார்த்து ரிஷிகளை உருவெடுத்த பிரதாபம்
நிச்சயமாக விஞ்ஞான ஆய்வுக்கு அனுப்புவதற்குரியதுதான்!
அப்படித்தானே?
6) பெற்றவளைப் பெண்டாள்வது தவறில்லை. அதைச் சொன்னது
தான் தவறா? சொன்னதற்குச் சாபமா?
7) பாவையைப் படைத்து படுக்க வா எனக் குழைபவன் தான்
பிரம்மன்.
இவனுக்குப் பக்தனாய் இருப்பது எந்தவகையில் சரி?
சரஸ்வதி 48 உருக்களைக் கொண்டு, சங்கப் புலவர்களாய்
மாறிய கூற்றிற்குக் கேள்விகள் தேவையில்லை, ஒருசொல்
போதும் -
அந்த சொல் தந்தை பெரியாரின் காட்டமான சொல்
“தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி.”

கண்ணன் உருவான கதை
kannan
ஒருத்திக்குப் பிறந்து இன்னொருத்தியிடம் வளர்ந்தவன் ஆயர் பாடிக் கண்ணன், விஷ்ணுவின் தசாவதாரங்களில் கிருஷ்ணாவதாரமும்
ஒன்று.
வசுதேவனை அப்பனாக வரித்து, தேவகி வயிற்றில் அவதாரம் எடுத்த இந்தக் குறும்புக்காரக் கடவுளுக்குக் கோபிகைகள் குலவுவதற்கு
வாய்த்த குலக்கொழுந்துகள். தாலாட்டிப் பாலுாட்டிய பாவைகளிடமே மடியிலும், அதற்கடியிலும் கைவைத்தக் கில்லாடிக் கள்ளன் கிருஷ்ணன். பிறந்து விழுந்ததுமே, பிறப்பித்தவர்களை மிரளவைத்த தனித்துவம் இந்தப் பெருமானுக்கே உரியது. தொப்புழ் கொடியாட பிறப்பித்தவர்களைப் பார்த்துப் பிறந்ததும். கிருஷ்ணன் சொன்னானாம்.
“உங்கள் முற்பிறப்பு இப்படி இப்படி ! இனியும் நான் இங்கிருக்க முடியாது; என்னைக் கொண்டுபோய் நந்தகோபரிடம் விட்டு விடுங்கள்”என்று பயமுறுத்தினான் கிருஷ்ணன். பிரசவித்தக் களைப்போடு தேவகியும் அதற்குச் சம்மதித்தாள். விருப்பப்படி அவனை அனுப்பிவைத்தாள்.
கண்ணனை வளர்த்தவள் நந்தகோபரின் யசோதை. கோகுலத்தை ஆண்டுவந்த மன்னன் நந்தகோபரின் வீட்டில் சீரோடும் பேரோடும் வளர்ந்தான் கண்ணன். சின்னஞ்சிறு வயதிலேயே பூதன், சகடாசுரன், திருணாவர்த்தன் முதலிய பெரும் பெரும் புள்ளிகளை உயிர்”பொலி”போட்டவன் இந்தக் கோகுலப்பாலன்.
ருக்மணி, சாம்பவதி, கானிந்தி, மித்திரவிந்தை சத்தியவதி, பத்திரயை, லட்சுமனை, நப்பின்னை, சத்தியபாமா முதலான பத்தாயிரத்து நூற்று எட்டுப் பெண்டாட்டிகள் இவனுக்கு. தனக்குப் புத்திரபாக்கியம் இல்லையென்று ருக்மணியுடன் தவஞ்செய்திருக்கிறான் கிருஷ்ண பரமாத்மா. கோகுலத்தில் ஒரு முறை கண்ணன் ராதையுடன் கூடிக் குலவிக் களித்துக் கவிழ்ந்து கிடந்தபோது, விரஜை, கங்கை ஆகியவர்கள் அங்கு வந்தனர்.
வைத்த கண் வாங்காமல் இவர்களின் சேஷ்டைகளை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு மோகம் துளிர்விட்டது! கிருஷ்ணனின் தழுவலுக்காக ஏங்கினர் இருவரும். இதை எப்படியோ உணர்ந்து கொண்டாள் ராதை. உடனே அவள் கண்ணனை உதறிவிட்டு, அந்தப் பெண்களைப் பார்த்துப் பேசத் தொடங்கி ஏசி முடித்தாள். விரஜையைக் காட்டிலும் கங்கை ரோஷக்காரி ! விடுவிடென அங்கிருந்து மறைந்தாள். அவளின் மறைவோடு ஊர் உலகில் நீரோட்டம் அற்றுப்போனது. எங்கெங்கோ உள்ள உயிரினங்கள் எல்லாம் வறட்சி நிலையில் மிரட்சியுற்றுத் தவித்தன.
பிரம்மன் படை ஒன்றைத் திரட்டி, கண்ணபெருமானிடம் போனான், கங்கையின் மறைவால் காடு மேடெல்லாம் காய்ந்து போனதையும், மாடு மனிதர்கள் ஓய்ந்து போனதையும் எடுத்துக்கூறி விளக்கினான். இந்த வேண்டுகோள்களையெல்லாம் செவிமடுத்து. தன்னால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்று கையை விரித்தான் கண்ணன். கங்கை வெளிவந்தால் அவளை உறிஞ்சித் துப்பிவிட ராதை துடித்துக் கிடக்கிறாள். எனவே ராதையைப் போய்நீங்களே சமாதானம் செய்யுங்கள்; என்னால் எதுவும் நடக்காது என்று போய்விட்டான் பரமாத்மா.
பிரம்மனும் அவனின் பின்னோடிகளும் போயும்போயும் இவனை நம்பி இவ்வளவு நேரத்தைப் பாழடித்தோமே என்று குறை கூறியவாறு ராதையிடம் போய் சமாதானம் பேசினர். அவளும் கோபந் தணிந்தாள். பின்னர், கிருஷ்ணனது கட்டை விரலிலிருந்து கங்கை வெளிவந்தாள்!
(ஆதாரம் – அபிதான சிந்தாமணி பக்கம் 447-450
எங்கெங்கும் ஈரக்கோலம் ! மகிழ்ச்சி ஓலம் ! கங்கையின் பிரவாகத்தில் வறட்சி வற்றி, செழிப்பு சிதறியதாம்.
கிருஷ்ணனுக்கு ஆராரோ பாடி அமுதூட்டி வளர்த்த கோபிகையர்களை, ஆற்று ஈரத்தில் அவிழ்த்த கோலத்தில் அடித்துப் பதற வைத்த கதை பிரசித்தமான ஒன்று. இப்படிப்பட்ட கிருஷ்ண பரமாத்மாவின் கோடானு கோடி கும்மாளக் கூத்தை மெய்யுருகப் பரவலடித்து வரும் கண்ணதாசர்களுக்கு ஒரு சில கேள்விகள்:
கேள்விகள் :
1. பிறந்த குழந்தை பேசுகிறது; பெற்றவர்களை விட்டு மற்றவர்
களை நாடத் துடிக்கிறது. பெற்றுப் போட்டவர்களும் , உறவு
அற்றுப்போகட்டும் என்று விட்டுவிடுவது அறிவிற்குப்
பொருந்துகிறதா? அறியாமைக்கு விருந்திடுகிறதா? கடவுளைப்பெற்றால் , அவ்வளவுக்கா மனம் இறுகிப்போகும்?
2. வளர்த்த தாதிகளான “கோபிகை”க் கூட்டத்தை கணிகைக் கூட்ட
மாக்கி லீலைகள் புரிய தேர்ந்தெடுப்பதும், புடவைகள் திருடி
கலங்க அடிப்பதுதான் கடவுள் தன்மை என்றால், பஸ்
ஸ்டாண்டிலும், ரயில்வே ஸ்டேஷனிலும் காலரைத் தூக்கிச்
சீட்டி அடித்து அலைந்து திரியும் ரோடு ரோமியோக்களுக்குக்
கோவில் கட்டிக் கும்பிட நீங்கள் தயார் தானா?
கிருஷ்ணனுக்கும், இந்த இளசுகளுக்கும் பேதமேது?
3. பால்குடி மறக்காத வேளையிலேயே “ஆள்-அடி” வீரங்காட்டி,
கண்ட கண்டவனையெல்லாம் கண்ட துண்டமாக்கிய கண்ண
பிரான், “ராதே உனக்குக் கோபம் ஆகாதடி” என்று ஒரு டூயட்
பாடி தனது பதிவிரதையைப் பக்குவப்படுத்தாமல் விட்டுவிட்டு
பிரம்மனையே பிடரியைப் பிடித்துத் தள்ளிவிட்டானே! எப்படி?
கூழுக்கு அழுத குசேலனை “குபேர” குசேலனாக்கியவனின்
திறமையும், தெம்பும் இங்கு பட்டுப் போனதுக்கும் கெட்டு
மாண்டதற்கும் என்ன காரணம் ?
4. பத்தாயிரத்தெட்டு பாவைகளிடம் “முத்தே பூங்கொத்தே” என்று
பித்தாகித் திரிந்தவனின் பக்தர்களே! உங்கள் பக்தியின்
லட்சணத்தில் காமநெடி அடிப்பதற்குச் சப்பைக் கட்டு எது? ஏது?
5. சொந்தத்திற்குப் பிள்ளை இல்லையே என்று “தபசு” பண்ணிய
பரம ஆத்மாவிடம் “பிள்ளைவரம்” கேட்கும் “மலட்டுப்
பூச்சிகளே” கையாலாகாத கடவுளா கருக்குடத்தில் பயிர்
விளைவிப்பான்?



ராமன் உருவான கதை


muthu rama
அயோத்தியை ஆண்டுவந்தான் தசரதன். கொஞ்சநஞ்ச கால மல்ல இவன் ஆட்சி , சுமார் அறுபதினாயிரம் ஆண்டுகளாய் ஆட்சி நடத்தியவன் தசரதன். இவனுக்கு கோசலை, கைகேயி, சுமத்திரை என்ற மூவர் பட்டத்துக்குரிய மனைவிகள்; வேறு அறுபதினாயிரம் பெண்கள்; இஷ்டத்துக்கு வரும் இன்பராணிகள். இத்தனை இருந்தும் மழலை இல்லாத மலட்டு வாழ்க்கையில் மனம் வெறுத்துக் கிடந்தான் தசரதன்.
“பிள்ளைபெறுவது எப்படி?” என ஆலோசனை நடத்தினான். அமைச்சர்களும் அடிக்கடி வந்துபோகும் முனிவர் வசிஷ்டரும் அசுவமேத யாகத்தால் குழந்தையைப் பெறலாம் எனத் தீர்மானித்துச் சொன்னார்கள். அசுவமேதயாகம் என்பது – தனி வல்லுனர்களை வைத்துச் செய்யவேண்டிய ஒன்று என்றும் விளக்கினார்கள் அவர்கள்.
கலைக்கோட்டு முனிவன் என்பவன் இதில் பேர் போனவன். அவனை இழுத்து வருவது என்றால் இலேசுப்பட்ட காரியமல்ல. ஒரு வழியாய் “அதையும் இதையும்”கொடுத்து சரயு நதியோரம் இம்முனிவன் இழுத்துவரப்பட்டான். கலைக்கோட்டு முனிவனின் தலைமையில் யாகம் துவங்கியது . சம்பிரதாயப்படி தசரதனின் முதல் மனைவியான கோசலை. யாகக் குதிரையைச் சுற்றிவந்து, அதனை மூன்று வெட்டாக வெட்டிக் கொன்றாள். பின்னர், துடிதுடித்த குதிரை முண்டங்களுடன் இரவு முழுதும் அணைத்து, தனது துருதுருப்பைக் கழித்துக் கட்டினாள்.
காலை புலர்ந்தது. கோசலை குதிரை முண்டங்களில் இருந்து எழுந்ததும் தசரதனிடம் போனாள். தசரதனின் மற்ற இரு பட்டமகிஷிகளான கைகேயியும், சுமத்திரையும் அவனருகில் ஏற்கனவே நின்று கொண்டிருந்தனர்.
யாகவேள்வியில் கலைக்கோட்டு முனிவனுக்கு எடுபிடிகளாக இருந்த அத்வர்யு, ஹோதா மற்றும் உகதா ஆகிய மூன்று குட்டி முனிவர்களை அழைத்துத் தனது மூன்று மனைவிகளைத் தற்காலிக தானம் செய்தான் தசரதன். முனிவர்கள் மூவரும் தசரதனின் மனைவியரை அழைத்து கூத்தடித்தனர்.
பின்னர், அவர்களையும் சலிப்படைய வைத்துவிட்டனர் இந்தத் தசரதப் பத்தினிகள்.”இவர்களை வைத்துக்கொள்; பொன்னாகப் பொருளாகக் கொடு” என்று முனிவர்கள் பொருள்பறி நடத்திவிட்டு நடந்துவிட்டனர். அன்றே தசரதனின் மனைவியர் மூவரும் கருவுற்றனர்.இக்கருக்களின் உருக்களே ராமனும், அவன் இளவல்களும்.
விஷ்ணு பற்றிய கதைப்படி, இந்த ராம அவதாரமென்பது விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்று.
இந்த யாக விவரமெல்லாம், வால்மீகி ராமாயணத்து 14 -ஆம் சருக்கத்தின் விளக்கம். மொழி பெயர்த்தவர் பண்டிதஅனந்தாச்சாரியார்.
பண்டித மன்மத நாததத்தர் என்பவர் இந்த யாக நிகழ்ச்சியில் கோசலையின் பங்கை இங்கிலீஷின் மொழி பெயர்த்துள்ள வரிகளும், தசரதன் தன் பத்தினிகளை இரவல்வழங்கியதும் வருமாறு:
“Kausalya with three strokes slew that horse ex- periencing great glee. Kausalya with an undisturbed heart passed one night with that horse. The Hotas. Adhwaryus and the Ugatas Joined the king’s wives’. என்று குறிப்பிட்டுள்ளார்.
கோசலைக்கு ராமனும், கைகேயிக்குப் பரதனும் சுமத்திரைக்கு லட்சுமணன் மற்றும் சத்துருக்கனனும் பிறந்தனர்.
ராமனின் பிறப்புக் கதை இது. இவனின் சிரிப்புக் கதைகள் வேறு இருக்கின்றன. பக்தர்களே!
1. அறுபதினாயிரம் ஆண்டுகால ஆளுகை; அதே எண்ணிக்கைப்
பெண்களுடன் கேளிக்கை! இதென்ன வேடிக்கை? மந்திர
தந்திரக் கதைக்காரனின் அளப்பையும் ஆழப்புதைக்கிறதே இது!
2. பட்டத்து மனைவிகள் மூவர்; தனது கொட்டத்துக்கும்
கும்மாளத்துக்கும் என்று 60 ஆயிரம் அணங்குகள் என்றால்,
தசரதன் என்ன தசையுடலால் ஆனவனா, அல்லது
இரும்புலக்கைப் பேர்வழியா?
3 கலைக்கோட்டு முனிவனை இழுத்துவர, ஒரு கூட்டிக்
கொடுக்கும் வேலை கையாளப்பட்டிருக்கிறது. இந்த மாதிரி
யான பச்சை ருசி பரவசந்தான் முனிவர்களாகத் தகுதி வரம்பா?
4 கோசலை பஞ்ச கல்யாணிக் குதிரையை வெட்டிக் கூறாக்கி
அந்த முண்டங்களுடன் ஒட்டியும் கட்டியும் கிடந்து ஒரு
இரவைக் கழித்தாள் என்பது மிருகத்தனமா, இல்லையா?
சொல்வதானால், மிருகத்தனத்தில் கூட இத்தனை விரசம்
இருக்காது. ஒரு தெய்வப் பிறவியின் கரு உருவானது இப்படித்
தான் என்றால் அந்தக் கடவுளைக் கும்பிடுபவர்கள்
யோக்கியமான ஒன்றுக்குத் தாசர்கள் என்றுசொல்ல முடியுமா?
5 குட்டி முனிவர்களுடன் கொட்டமடித்து மகிஷிகளை விட்டுப்
பிடிக்கும் கூத்து மானமுள்ளவனால் செய்யக்கூடியதா?
மானங்கெட்ட அப்பனுக்கும், ஆயிக்கும் வந்தவனுக்கும்,
போனவனுக்கும் பிறந்தவன் தான் தெய்வப்பிறவியா?
6. கிய மலர்களான தனது பத்தினித் தங்கங்களைப்
பெற்றுக்கொண்டு. பொன்னும், பொருளும் தந்துதவும்
வரம்பெற்ற வள்ளல் தன்மை இருந்தால் தான் தெய்வங்களின்
தகப்பன் பட்டம் கிடைக்கும் போலும்!
7. இப்படிப் பிறந்த ஒரு அசிங்கப் பிறவியின் ஆதரவை நாடி,
“ராமஜெயம்”எழுதி வெள்ளைத்தாள்களை விரயமாக்கும்
போக்கு இனியும் தேவைதானா?

லட்சுமி உருவான கதை

laxmi
மகிஷன் என்ற அரசனுக்கு ரம்பன் என்பவன் அப்பன்; மகிஷனுக்கு அம்மா ஒரு எருமை. ரம்பனுக்கும் எருமைக்கும் பிறந்த மகிஷன் தேவர்களை தொல்லைப்படுத்தி வந்தான். தேவர்கள் கூட்டம் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளிடம் முறையிட்டது.
மும்மூர்த்திகளும் அளவற்ற கோபமடைந்து அக்னியாய்த் தகித்தனர். இக்கோபத்தின் ஒளிப்பிழம்பே மகாலட்சுமி. இவள் போய் மகிஷனை மாய்த்தாள். தேவர்களின் தொல்லையை தேய்த்தாள். தேவி பாகவதம் என்ற புராணம் இந்தச் சரடைவிட்டுள்ளது.
மகிஷாசுரமர்த்தினி, தேவி, லட்சுமி, மகாலட்சுமி என்றெல்லாம் பூஜிக்கப்படும் தெய்வமும் இவளே! இவள்தான் ஒரு பிறப்பில் சீதையாக இருந்தவள்.
பூர்வஜென்மத்தில் குசத்துவர் என்ற முனிவர் வேதம் ஓதிக் கொண்டிருந்தாராம். அவ்வாறு வேதம் ஓதிக்கொண்டிருக்கும்போது அவரது வாயிலிருந்து பொத்தென்று இவள் பிறந்த கதை ஒன்று (அபிதான சிந்தாமணி-பக்கம் 673) உண்டு. இதனால் வேதவதி என்ற பெயருக்கும் இவள் சொந்தக்காரியானாள்.
குசத்துவன் என்ற முனிவன் பிரம்மனைப்போல் அயோக்கியனாக இல்லை; வேதவதியாகிய லட்சுமியை கன்னி கழிக்காமலேயே கண்ணியமாக வளர்த்து வந்தான். தங்கப்பதுமையாய் வளர்ந்து வந்தவளிடம் மனம் பறிதந்தவன் தம்பன் என்பவன்; இவன் ஒரு அரக்கனாம். இவன் கடவுள்களைப் போல லட்சுமியை நகர்த்திப் போகாமல் நேர்மையாக வளர்த்தவனிடம் போய் பெண் கேட்டான்; அவன் தரத் தயாராக இல்லை; தம்பன் அந்த முனிவனை சாகடித்து விட்டுப் போய்விட்டான். வளர்த்தவனும் இல்லை. வளர்ப்பவனும் இல்லை. இந்நிலையில் தன்னை சுவைப் பவனாகவாவது ஒருவன் தேவையென முன்ஜென்மத்துப் புருஷன் விஷ்ணுவை நினைத்துத் தவஞ்செய்தாள்.
அப்போது அப்பக்கமாய் வந்த இலங்கை வேந்தன் இராவணன் இவளிடம் வந்தானாம்; தொட்டு இழுக்க லட்சுமி ருத்ர தேவதையாய் உருவெடுத்தாள். நீ தீண்டிய உடலை இனிமேல் என் உயிர் தாங்காது; நானே உன்னை அழிக்கிறேன்! இதற்குமுன் அக்னியில் அழிகிறேன் என்று சவாலும் சாபமுமாய் தீக்குளித்தாள்.
அதன் பின். . .
இவள் இலங்கையில் தாமரைத் தடாகம் ஒன்றில் அலர்ந்து மலர்ந்த தாமரையில் பிறந்தாளாம் . இவள் இருந்தால் ஆபத்தென அஞ்சிய இராவணன், லட்சுமியை பெட்டியில் வைத்துக் கடலில் விட்டான்; அலையில் மிதந்த லட்சுமியைத் தாங்கிய பெட்டகம் வெள்ளப் பெருக்கில் தடுமாறி மிதிலை நகர் மண்ணில் புதைந்து கொண்டது. மிதிலை நகர மன்னவனான ஜனகன் யாகத்தின் பொருட்டு நிலத்தை உழுதான். உழுத நிலத்திலிருந்து அழுத குரல் கேட்டு பெட்டியைத் திறந்தால் மூக்கும் முழியுமாக ஒரு குழந்தை; எடுத்தான்; வளர்த்தான் ஜனகன், சீதாப்பிராட்டி இவள்தான். ஜானகி என்பவள் இவள்தான். கற்பின் கனலாகக் காட்டப்படுபவளும் இவள்தான். இப்படியாக நீள்கிறது இவளின் பிறவி லட்சணங்கள்!
(ஆதாரம் : அபிதான சிந்தாமணி பக்கம் 673)
கேட்க விரும்புகிறோம் சீதாராம தாசர்களை!
1. எருமையை ஒருவன் புணர்ந்தான்; அதில் அவன் இன்பத்தை
உணர்ந்தான்! பெற்றான் ஒரு பிள்ளையை அது தேவர்களுக்குத்
தந்தது தொல்லையை! எருமை -அசுரப் புணர்ச்சியில்
எருமையின் உருவுக்கு எதுவுமின்றி அசுரனுக்கு மட்டும் வாரிசு
கிடைத்தது எப்படி?
2. மும்மூர்த்திகளும் நினைத்த மாத்திரம் கிள்ளியெறியக்
கூடிய ஒரு அற்பனை அழிக்கப் புதிதாக ஒரு பெண்
தெய்வத்தை உருவாக்க வேண்டுமா? -தங்கள் திறமையில்
தங்களுக்கே நம்பிக்கையில்லாத சோதாக்களா மும்மூர்த்திகள்!
3. வேதம் ஓதம் வாயில் வேதவதி பிறக்கமுடியுமா?
4. ஒருத்தி மீது மையல் கொண்ட மாத்திரத்தில் எப்படியாவது
காரியம் சாதிக்கும் கடவுள்கள் நடுவே முறைப்படி பெண்
கேட்க அரக்கன் தம்பன் போயிருக்கிறான். அப்படியானால்
கடவுள்களைவிட அரக்கர்கள் எனப்படுவோர் யோக்கியர்கள்
தானே!
5. லட்சுமி தவம் செய்வதோ விஷ்ணுவை நினைத்து , வந்தவனும்
வம்புக்கிழுத்தவனும் ராவணன்.
அப்படியானால் ‘தவ வலிமை’என்பதெல்லாம் தகிடுதத்தமா?
தற்குறித்தனமா?
6. பெட்டியில் மூடிய குட்டி உயிர் நிலத்தில் புதைந்தும் நோகாது
சாகாது எப்படி இருந்தது?
விஷ்ணு பகவான் உருவான கதை
lord_vishnu_on_ananta_de53
விஷ்ணுவின் விஷயங்கள்
புராணப் புளுகர்களின் அளப்புக்கு அளவே இல்லை. அந்தக் காலத்தில் உச்சவரம்பு சிந்தனை தோன்றி இருக்கக் கூடாதா? அதனை இந்தப்புராண கர்த்தாக்களின் பாட்டுக்களில் புரளவிட்டிருக்கக் கூடாதா என்ற நியாயமான நப்பாசை ஏற்படுகிறது. பிரம்மன்,படைப்புக் கடவுள் என்கிறான் ஒருவன்; விஷ்ணுவுக்குப்பிறந்தவன் தான் பிரம்மன் என்கிறான் இன்னொருவன். அந்த விஷயத்திற்குள் போகாமல் விஷ்ணுவிடம் போவாம்.
பல பெயரில் பிரபலமான பெயர்; இவனைப் பொறுத்தவரை விஷ்ணுதானாம். பிரம்மனைப்போலவே இவனும் மூன்று பெண்டாட்டிப் பேர்வழி, லட்சுமி, பூதேவி, நீலாதேவி, ஆகியவர்கள் தான் அவர்கள்.
வைகுண்டத்திலேயே வாழ்நாளை ஒட்டிவரும்இவன், கோடை வெயிலில் மட்டும் திருப்பாற்கடலில் குடியிருக்கப்போய்விடுவான். காஷ்மீரின் கண்கவர் ஆறுகளில் படகு வீடுகள் இருக்குமே அதுபோல் திருப்பாற்கடலில் “சீசனுக்கு”வரும் இவனுக்குப் பாயாகவும் படுக்கை யாகவும், மெத்தையாகவும், மிதப்பாகவும் இருப்பது ஆதிசேஷன் என்னும் பயங்கரப் பாம்பு. இதற்குத் தலைகள் ஆயிரம். இந்தப் பஞ்சணையில்தான் -ஒரு கையைத் தலைக்கு ஓரங்கொடுத்து, ஒருக் களித்துப் படுத்து ஒய்யாரக்காட்சி அளிப்பான் விஷ்ணு! பக்கத்தில் லட்சுமி வேறு. இந்தக் கோலத்தை “அனந்த சயனம்”என்று ஆர்ப்பரித்துக் களிப்பார்கள் பக்தர்கள். பூலோகம் அந்தர்லோகம் மற்றும் சுவர்க்க லோகம் என்ற மூன்று உலகத்துச் சகல உயிரினங்களையும் கட்டிக்
காப்பது இவனது பணி.
மற்ற எல்லாக் கடவுளிலும் விசேஷமானவன் இவன். ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு அவதாரம் எடுக்கும் இவன், இதுவரை பத்து (தசாவதாரம்) அவதாரங்களை எடுத்து ஓய்ந்துவிட்டான். இன்னும் ஒரு அவதாரம் எடுத்துவிட்டால் பூலோகம் காலியாம்! ஒவ்வொரு அவதாரத்தின் முடிவிலும் பிரளயம் ஏற்படுத்தி ஆனந்திப்பவன் விஷ்ணு.
மச்சாவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம். பரசுராம அவதாரம், ராம அவதாராம் , பலராம அவதாரம் கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம் முதலியவை இவன் எடுத்த குறிப்பிடத்தக்க அவதாரங்கள்.
(இதில் பவுத்த அவதாரம் என்பது ஒரு மோசக் கற்பனை. புத்தரின் செல்வாக்கை ஒழிக்க இப்படி ஒரு புளுகு)
ஒவ்வொரு அவதாரத்திலும் விஷ்ணு போட்ட களிக் கும்மாளத்தை எழுத, கத்திக் குத்துப்பட்டுச் செத்த லட்சுமிகாந்தன் அவதாரம் எடுக்க வேண்டும். இவனின் ஒரே ஒரு ஆபாசத்தை எட்டிப் பார்ப்போம்.
அடிக்கடி மாறுவேடம் போடும் மகத்துவம் இவனுடையது அதுவும் பெண் வேடமிட்டுக் கொள்வதென்றால் இவனுக்குத் தனிக்குஷி. ஒவ்வொரு முறையும் மாறுவதோடு மட்டுமல்ல ; பெண்ணாய் மாறி எவனுடனாவது ஓடுவதும், அல்லது எவனையாவது வரச்செய்து சுகிப்பதுமே இவனின் வேலை. அதோடு -கர்ப்பத்தடை முறைக் கெல்லாம் போகாமல் கண்ணியமாய் பிள்ளையும் பெற்று – விட்டெறிந்து போகிறவன் இந்த விஷ்ணு!
அமிர்தம் வேண்டி ஆழ்கடலாம் பாற்கடலைக் கடைந்து குடைந்து கொண்டிருந்தனர் தேவர்களும், அசுரர்களும்.பல பாடு களுக்குப்பின், அமிர்தம் கொப்பளித்தது. இதனைப் பங்கு வைக்கும் விஷயத்தில் தேவர்களும், அசுரர்களும் குடுமிப்பிடி போர் நடத்தினர்.
சும்மா இருக்கும்போதே இந்த அசுரர்களின் தொல்லை பொறுக்க முடியவில்லை. அமிர்தத்தைக் குடித்து விட்டால் நம் கதி அதோகதிதான் என்று அஞ்சிய தேவர்கள் “அமிர்தம் எங்களுக்கே ; அசுரர்களுக்குத் தரக்கூடாது”என்று பிடிவாதம் பிடித்தனர். தேவர்களின் இஷ்ட தெய்வம் மகாவிஷ்ணு அவன் தனது பக்தகோடிகளுக்குச் சாதகமாக அமிர்தத்தைப் பகிர்ந்துதர மோகினி வேடம் எடுத்து அசுரர்கள் அணைப்பிற்கு ஆளானான். ஒரு வழியாய்த் தேவர்கள்
அமிர்தத்தோடு கடை கட்டினர். அவர்களுக்கு ஈடுகொடுத்துவிட்டு, இளைப்பாறப் போன விஷ்ணுவை சிவன் பார்த்தான். அவ்வளவுதான் நடக்கவேண்டியது நடந்தது! இந்நிலையில் பிறந்தவன் தான் “ஹரிஹரன்” என்ற குட்டிக் கடவுள்.
(ஆதாரம் அபிதான சிந்தாமணி பக்கம் 1484)
கேள்விகள் கீழே:
1) கோடை வெயில் தாளாமல் “குளு-குளு” வென்ற சுகம் தேடி
இடம் மாறும் பேர்வழியாய், தொட்டாற் சுருங்கியாய்
இருப்பவன் தான் கடவுளா? பாம்புப் படுக்கையாம் நம்ப
முடியுமா?
பக்கத்தில் லட்சுமிகரம் வேறு! அதிலும் நியாயம் இல்லாமல்
மூன்று பெண்டாட்டிகளில் இரண்டைத் தனிமையில் தவிக்க
விட்டுவிட்டு, ஒன்றை மட்டும் படுக்கையில் குந்த வைத்துச்
சொந்தம் கொண்டாடுவதா?
2) ஒவ்வொன்றாய் இவன் அவதாரம் எடுப்பதும், உலக மக்களை
ஒழித்துத் தள்ளுவதும் கருணையா? கொடுமையா?
அப்படியானால் , 21 ஆம் நூற்றாண்டில் ஏன் அவன் அவதாரம்
எடுக்கவில்லை?
3) வேஷம் போடுவதில் அலிகள் ஆசைப்படுவது போல், பூ
வைத்து பொட்டு இடும் வேஷத்திலேயே குறிப்பாக இந்தக்
கடவுள் இருக்கக் காரணம் என்ன? இது -எந்த இடத்துக்
குறை என உங்களுக்குப் படுகிறது? வாய்விட்டுச் சொல்லும்
தெம்பு, திராணி உண்டா?
4) அமிர்தம் வேண்டிய தனது பக்தர்களுக்காக அசுரர்களை
வஞ்சிப்பது, திருட்டுத் தராசின் நிறுவை அல்லவா? இதுதான்
ஒரு கடவுளின் யோக்கியதையா?
5) அசுரர்கள் ருசித்த எச்சில் மோகினியை, உலக நாயகனான
சிவனே சீரழித்தான் என்றால், ஆணுக்கு ஆண் அசிங்கம்
நடத்தப்பட்டது என்றுதானே பொருள்?
சிவ வழிச் சிங்கங்களும், வைணவ நெறித் தங்கங்களும்
இதற்கென்ன பதில் சொல்லமுடியும்?
சிவன் -இவர் அழித்தல் வேலையை செய்வாராம்..


lord-shiva-and-pa
சிவபெருமான்தான் கடவுள்களின் தலைவன், இவன் யாருக்கும் பிறந்தவனல்ல. தானாகவே தோன்றியவன் (சுயம்பு).
ரிஷிமூலம், நதிமூலம் போல், இவன் பிறப்பு மூலத்தையும் ஆராயக்கூடாது. பிரம்மனையும், விஷ்ணுவையும் இவன்தான் தோற்று வித்தவன். இந்த இரு கடவுளும் கூட சக்தியின் முகத்திலும் தோளிலும் பிரசவமானவர்களாம்!
“நமசிவாய”என்னும் அய்ந்தெழுத்தை(பஞ்ச அட்சரம்) பிரமனுக்குப் போதித்தவனும் சிவன்தான்.
ஒரு காலத்தில் தன்னைத்தேடி ஓடிவந்த தேவர்களிடம் என்ன – ஏது? என்று கேட்க சிவனுக்குத் தாருகாவனத்து ரிஷிகளின் தலைக் கனம் புலப்பட்டது. ரிஷிகளின் கனத்தைவிட , ரிஷி பத்தினிகளின் கனமும் – ( தலைக்கனந்தான்) சிவனின் கவனத்திற்கு வந்தது.
கனத்தை இறக்கி, அந்த ‘அற்ப’ஆத்மாக்களுக்கு நல்ல குணத்தை ஏற்படுத்துவதாக வாக்களித்தான் சிவன். தேவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.
விஷ்ணுவை அழைத்தான் சிவன் “மோகினி உருவெடுத்து, தாருகாவனத்து ரிஷிகளின் மோகத்தை ஒரு கை பார்” எனத் தனக்குக் கட்டளை பிறந்ததும், தளுக்குக் குலுக்குடன் விஷ்ணு தத்தித் தாவினான் தாருகாவனத்திற்கு.
மோகினியாய் மாறிய விஷ்ணு ரிஷிகளுக்கு ருசிகளை வழங்கி கலங்கிக் கிடந்த வேளையில்.
ரிஷி பத்தினிகளின் படுக்கை அறைப் பசி, பட்டினிகளுக்குப் பருவப் பார்வையால் பதில் தெளித்துவந்தான் சிவன்.
அதுவும் சிவனாக அல்ல; பைரவர் வேடத்தில்.
தங்கள் தங்கள் மனைவிமார்கள் எங்கெங்கே, என்னென்ன செய் கிறார்கள் என்பதை அறிய, தங்கள் ‘ஞானதிருஷ்டி’ யக் கூட முடுக்கிவிட மறந்தவாறு மோகினி காட்டிய சொர்க்கத்தில் மூழ்கித் திளைத்தனர் ரிஷிகள்.
ரிஷி பத்தினிகளின் கதையும் இதேதான்.
வந்தது யார் என அடையாளம் நோக்காமல், அணைத்து மகிழ்ந்து ஆசை தணிந்தபின் “போச்சே கற்புப் போச்சே” என்று கூவினர்.
பதிவிரதத்தில் பங்கமும், பழுதும் பற்றி விட்டதைப் பாருக்குணர்த்த, கூச்சலே உபாயம் எனக் கருதினர் போலும்.
பார்த்தான் சிவன்; பருவச்சுவையினைப் பருகி உருகிய பத்தினிகள் பதறிப் புலம்புவதையும், கதறிக் குழம்புவதையும் பார்க்கப் பார்க்கப் பொறுக்கவில்லை அந்தச் சிவனுக்கு.
ரிஷிகளும் வந்தனர். தமது தர்மப் பத்தினிகளிடம் தரங்கெட்ட ஆட்டம் போட்டவன் சிவன் என அறிந்ததும் ‘சிவனே’ ன்று சிலர் குந்தினர். “சிவ- சிவ”என்று சிலர் பொங்கினர்.
பெரியவர் செய்தால் பெருமாள் செய்த மாதிரி என்ற சொல்லின் மூலம் இதுதான் தனக்குப் பிராயச்சித்தப் பரிகாரமும் இறுதியில் சிவன் சொன்னான்.
“ரிஷிகளே ! ‘அபிசார’ வேள்வி செய்யுங்கள் ஆகட்டும் பார்க்கலாம்” என ஓடிவிட்டான். அபிசார வேள்வி என்பது -ஒரு பிராயச்சித்தக் காரியமாம்.
ரிஷிகள் வேள்வி செய்தனர். என்னதான் செய்தாலும் கோபம் கொழுந்து விடாமல் இல்லை.
உடுக்கை, அக்னி, மழு, சூலம் இவற்றை அவர்கள் ஏவ, அதனைக் கையால் பிடித்தான் சிவன், காலங்காலமாய்ச் சுமக்கிறான்.
சர்வ சாதாரண “வழக்குச்சொல்” சிலவற்றிற்கே “சிவ சிவ” என்று காதை கைகளை விட்டுக் கவ்விடும் சிவனடித் திருக்கூட்டங்களே சில சந்தேகங்கள்:
1) முன்னைப் பழமைக்கும் பழைமையாய் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் வர்ணிக்கப்படும் சிவன், தானாய்த் தோன்றியது எப்படி? அப்படியே இருந்தாலும், சக்தியை அவன்தான் ஆக்கினான் என்றாகிறது. இது உண்மையென்றால் மக்களைப் புணர்ந்தவன்தான் மகேசனா?
2) சக்தியின் முகத்திலும், தோளிலும் பிரமனும் விஷ்ணுவும் பிறந்த கூத்து பிரமாத வித்தைதான்! அப்படியானால், பார்வதி அம்மாளுக்குப் பரிபக்குவமான பாதைகள் எத்தனை?
3) தனக்கு வாழ்த்துச் சொல்லுகின்ற நமசிவாய என்ற பஞ்சாட் சரத்தை தானே போதிப்பதென்பது தற்புகழ்ச்சித் தன்மையல்லவா? எல்லாம் வல்ல ஆண்டவனுக்கு அடுக்குமா இந்தக் குணம்?
4) சிலர் தலைக்கனம் பிடித்துத் திரிந்தலைந்ததற்குக் கற்பழிப்பது என்ன முறை?
5) அம்மி மிதித்து, அருந்ததி பார்த்துக் கட்டுக்குலையா பத்தினிகள் கிடைத்தும், திடீர் வரவு மோகினியிடம் திருட்டுச் சுவை காண்பவன் தான் ரிஷியா?
6) கற்பழித்த பாவம். வேள்வி செய்தால் கேள்வியின்றிப் போகுமா? பிராயச்சித்தம் இப்படித்தான் என்றால், சிவனடியார்களும் இப்படிச் செய்யத் தயாராய் இருப்பவர்களைக் கண்டும் காணாதுவிடத் தயார்தானோ?
(ஆதாரம் : அபிமான சிந்தாமணி பக்கம் 659)


கந்தன் உருவான கதை.

LordMurugan03
கந்தன்
சிந்திய விந்தில் வந்தவன் கந்தன்
குறிஞ்சி (மலைப்பகுதி) தெய்வம், குமரக் கடவுள், இவனைத் தமிழ்க் கடவுள் என்று சொந்தமும், பந்தமும் கொண்டாடுவோர்க்குக் குறைச்சலில்லை. ஆண்டிற்கு ஒருமுறை அலுக்காமல் , சலிக்காமல் அறுபடை வீட்டிற்குப் பக்தர் படைதிரட்டும் “டூரிஸ்ட்” வியாபாரமும்
மலிந்து வரும் காலம் இது.
இந்த சுப்பிரமணியக் கடவுளின் அனந்தகோடி- சகஸ்ர நாமங்களில் ஒன்று ஸ்கந்தம். வடமொழியில் தத்தெடுத்து – தமிழ் மொழியில் பிய்த்துவந்த கந்தன் என்ற பெயரின் மூலம் இதுதான்.
ஸ்கந்தம் அல்லது கந்தம் என்றால் ‘விந்து’ என்று பொருள்.
விந்திலிருந்து பிறப்பதுதான் உயிரினம். அய்ந்தறிவு முதல் இன்னொரு அறிவினையும் உபரியாகப் பெற்றுள்ள மனித இனம்வரை இதுவே நடைமுறை. ஆனால் கடவுள் அவர் ‘அதீதப்பிறவி’ அப்படி இருந்தால் தானே மனிதனுக்கும் -மகேசப் பிறவிகளுக்கும் தரந்தெரியும்.
இந்தக் கந்தனும் இதற்குச் சொந்தம்.
கந்தனின் ஜனன ரிஜிஸ்டரைப் புரட்டுவோம்.
தேவர்களை; அசுரர்கள் கொடுமைப்படுத்தினர் இந்த அசுரர் களில் குறிப்பிடத்தக்கவர்கள் சூரபத்மனும், சிங்கமுகனும், சத்துக் கெட்ட சவுண்டித்தேவர்களுக்கு மனக்குடைச்சல் தாளவில்லை.
உலக மகாக் கடவுளான சிவனின் நிரந்தர ரெசிடென்ஸான கைலாசத்திற்கு அலறி அடித்துத் திமிறிக் குதித்து ஓடினர்.
அங்கே அவர்கள் கண்ட காட்சிக்கு ஒப்பிட ப்ளு ஃபிலிம் தவிர, வேறு சரிநிகர் சமானம் எதுவுமில்லை. ரிகார்டு டான்சையும் புறங்காண வைக்கும் நடனமாடிக் களித்த சதி -பதிகளிடையே சிவ பூஜைக் கரடியாய்க் குறுக்கிட்டுத் தொலைத்தனர் தேவர்கள். அசுரர்
களால் தாங்கள் படும்பாட்டை ஒரு பாட்டம் அழுது தீர்த்தனர். ஆவன செய்வதாக அவர்களை அனுப்பிவிட்டு, தர்மபத்தினியைத் தழுவிக் குழைந்தான் சிவன்.
இந்தத் தழுவலும், நழுவலும் கோழியைப் போல கொஞ்ச நேரத்தில் முடியவில்லை, மனிதர்களைப் போல மணிக்கணக்கிலும் ஒடுங்கவில்லை.
காலங்காலமாய் ‘கலவியில்’லயித்தனர் சிவனும் சிவகாம சுந்தரியும், மொத்தம் மூன்று லட்சத்து அறுபதினாயிரம் நாட்கள் விட்டேனா, விடுவேனா என்று பதறாமல் சிதறாமல் ஒருவரையொருவர் அனுசரித்து போர்க்களத்தில், மோகக் குளத்தில் கதையை நடத்தினர்.
இத்தனை நாட்கள் ஆனபின்பும், பார்வதியின் வயிற்றில் ஒரு பூச்சி, புழு தரிக்கவில்லை . மசக்கை ஏற்பட்டு அவள் மாங்காய், மாதுளங்காய் ருசிக்கவில்லை.
பார்த்தனர் தேவர்கள். பொறுமைக்குப் பெருமை இல்லை என்று முடிவுகட்டி, அசுரர்களின் கொடுமை கடுமையுறுவதைக் கண்கலங்க, கதிகலங்க எடுத்துரைத்தனர் சிவனிடம்.
சிவனும் தனது “சிருஷ்டி”பற்றி மறு பரிசீலனை செய்தான். ஒரு அவசரகால நடவடிக்கையாகத் தனது கலவியை நிறுத்தி, இந்திரியத்தை வான வீதியைப்பிரித்துக் காட்டும் சூன்ய வெளியில் சொரீர் எனப் பாய்ச்சி அடித்தான் பிரவாக வேகத்திற்காகப் பீய்ச்சி அடித்தான். ஓ! விந்தின் பிரளயம்!!
மழையாய்ச் சொரிந்து, மண்ணில் மறைந்து, நொங்கும் நுரையுமாய் அலையடித்து ஓய்ந்து, கங்கையில் ஒடுங்கிய விந்துச் சுழலில் ஆறு மிதப்புகள்.
நீரில் பெய்த எண்ணெய்த் துளிகளாய் மிதந்து அலைந்தன அவை.
நீராட வந்த பெண்கள் அறுவர் போராடிப் போராடி அந்த விந்துத் திவலைகளில் ஒவ்வொன்றையும் அக்கினி பகவான் தர எடுத்துக்கொண்டனர்.
எடுத்ததுதான் மாயம், விந்துத் திவலைகள் உயிர் பெற்று, குழந்தைகளாய் மாறி, குமிழ்ச் சிரிப்பைச் சிந்தின.
சிந்திய குழந்தைகள் அத்தோடு விடவில்லை. தழுவிக் கிடந்த மார்பகக் கரு நுனியில் வாய்வைத்து உறிஞ்சின-பாலுக்காக.
பின்னர்-
ஆறு உடலையும் ஒன்றாக வைத்தார்கள் அந்தப்பெண்கள்.
உடல் ஒன்றானது. ஆனால் தலைகள் ஒன்றாகவில்லை.
“ஆறுமுகம் ஆன பொருள்” கடவுளானது.
இந்த அரை டசன் தலைகள் உள்ள சரவணனின், குமரனின், முருகனின் பிறப்பே இப்படி.
இவனை “ஆற்றுப்படை” பாடியழும் சந்தக் கவிகளின் புளுகு மூட்டைகள் எண்ணத் தொலையாதவை.
பக்தர்கள் பார்வைக்காகவும், பதிலுக்காகவும் பின்வருபவை:
1) தேவர்களை அசுரர்கள் கொடுமைப்படுத்தினர் என்றால், தவர்களின் திறமைகளாகக் குறிப்பிடப்படும் ‘அமானுஷ்ய’ சயல்கள் அடிபட்டுப் போகின்றனவே, இது முரண்பாடாகத்
தெரியவில்லையா?
2) துன்பமுறும் தேவர்களின் துயர்துடைக்க ‘மனோ’ கத்தில்அருள்பாலிக்கும் வல்லமையுடைய சிவபெருமான் அப்படிச் செய்யாமல், எண்ணி மாளாத நாட்களாய்ப் புணர்ச்சி ணர்ச்சியில் அய்க்கியமாகிக் கிடந்தது ஏன்?
மன’விகாரத்தை’ ந்த நிகழ்ச்சி வளர்க்கவில்லையா? ‘வாத் சாயனரை’ வடிகட்டிக் குடித்து நரம்பு செத்துப் போனவனும் வக்கரிப்பு உணர்ச்சியில் துடிப்பானா, மாட்டானா? பொகாஷியோவின் “டெக்காமெரான்” கதைகளும், ரோமாபுரி ராணிகளின் ரோமச் சிலிர்ப்பு சாகசங்களும், ஃபிரெஞ்சு இலக்கியத்தைக் குட்டிச்சுவராயடித்த மாபசான் மறைவுத்துறைக் கதைகளும், எமிலிஜோலாவும் ஊட்டாத இன் விருந்தைப் படைக்கவா இப்படிப்பட்ட இழிநிலைக் கதைகளும், கழிசடைப் புளுகுகளும்?
“கிளைமாக்ஸ்”ஸாக விந்துப்பெருக்கை ஆறாக்கி அதில் உயிர்வருவதைக் கூறாக்கி ஒரு குட்டி ராவணன் போல் ஆறுதலையுடைய கடவுளை உண்டாக்குவதுதான் பக்தியா? இப்படித் தானா கடவுள் வரலாறு?
(மேற்குறித்த கதைக்கு ஆதாரம் : காஞ்சி புராணம் சுகசரீரப்படலம்)
இப்புராணத்தில் பாட்டு எண் 28-இல்
“இமயவல்லி வனமுலை தாக்க மகிழ்ந்து, பலநாள் கலவிப் பெருநலம் துய்க்கும் காலை அண்டர் உணர்ந்து வெறுவி அஞ்சி, அம்பிகை, தன்பால் கருப்ப வீறுகொண்டிட முன்னம் சிதைவு செய்யும் அங்கியை ஏவினர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
(பாகவதத்திலும், ராமாயணத்திலும் இதற்கு ஆதாரமுண்டு)

இந்து புராணம் சொல்லும் விநாயகன் உருவான கதை.

விநாயகன்
smah23flw
விநாயகன் பிறந்தான் அழுக்கில் -ஆபாசத்தில்
தன்னை வணங்கியவர்க்கு விக்கினத்தை(குறைகளை) நீக்குபவன் விநாயகன்.
தன்னை வணங்காதவர்க்கு விக்கினத்தை உண்டாக்குபவன் விநாயகன். சொல்கிறது புராணம்.
வேண்டியவர்க்கு நன்மையும், விலகியவர்க்குத் தீமையும் விளைவிப்பவனாம் இவன். இந்தப் பூச்சாண்டிக் கடவுளின் பிறவி வரலாற்றில் இரண்டு கதைகளை மட்டும் இங்கே பார்ப்போம்.
பரமசிவனுடைய மனைவி பார்வதி, ஒரு சமயம் குளிக்கப் போனாள். அப்போது தனது உடம்பிலிருந்து திரட்டிய அழுக்கைக் குவித்து , உருவமாக்கிக் காவலுக்கு வைத்தாள். அழுக்கில் உயிர்பெற்ற அந்த உருவத்தைப் பார்த்து, “யார் வந்தாலும் உள்ளே விடாதே” என்று கட்டளையிட்டுக் குளிக்கப் போய்விட்டாள். அச்சமயம் அங்கே பரமசிவன் வந்தான். அழுக்கு உருவமோ, அவனை உள்ளேவிட மறுக்கவே கோபங்கொண்ட பரமசிவன், தடுத்தவனின் தலையை வெட்டித் தள்ளிவிட்டு உள்ளே போய்விட்டான்.
குளித்துக்கொண்டிருந்த பார்வதி தன்னிடம் வந்த பரம சிவனைப் பார்த்து,”எப்படி இங்கே வந்தீர்கள் ? காவலுக்கு இருந்தவன் எங்கே?” என்றாள்!
காவல் காத்தவனை வெட்டி, ஒழித்துக் கட்டிவிட்டதாகப் பரமசிவன் சொன்னான்.
அழுக்கால் ஆக்கப்பட்ட தனது மகன் சாகடிக்கப்பட்டதை அறிந்து, அழுது புரண்டாள் பார்வதி.
பரமசிவன் பார்வதிக்கு ஆறுதல் கூறி வெளியே வருகையில், யானை ஒன்று எதிரே வந்தது, அதன் தலையை வெட்டி, அழுக் குருண்டைப் பிள்ளையின் முண்டத்தில் ஒட்டி, உயிர் தந்தான் சிவபெருமான்.
இது பிள்ளையார் பிறப்புக் கதைகளில் ஒன்று.
(ஆதாரம்: கந்த புராணம் மற்றும் சிவபுராணம்)
இன்னொன்று:
நந்தவனத்தில் உலவிவந்த சிவ- பார்வதி தம்பதிகள், ஒட்டி யிருந்த படர்ந்த காட்டில் எதற்கோ நுழைந்தனர். அங்கே யானைகள் இரண்டின் கலவிக் காட்சியைக் கண்டனர். கட்டுமீறிப்போன ஆசையில் கட்டிப்புரண்டனர் இந்தக் கடவுள் தம்பதிகள்.
தேவாரத்தில் சம்பந்தர் “பிடியதன்” என்று துவங்கும் பாட்டில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுக் குலையாத மேனிகளில் அரும்பு கட்டியது வியர்வைத் துளிகள். கலவிக் கோலங்கொண்ட யானையைப் பார்த்தே மனைவிக்கு ஆலிங்கன ஆணைகளைப் பிறப்பித்தான் சிவன்.
எனவேதான், பிறந்த பிள்ளையார் யானை மூஞ்சியாய்ப் பிறந்து மூஞ்சூறு சவாரியில் காலந்தள்ளினான். விநாயகப் பக்தர்களை வினவு கிறோம். பேதமைக்குச் சுழியடிக்கும் பிள்ளையார் சுழி ரசிகர்கள்,முகஞ்சுழியால், அகம் சலியாமல் பதிலைத் தரட்டும் பகுத்தறிவாளர்களுக்கு.
1) வேண்டியவர்க்கு நன்மையும்- இக்கொள்கையைத் தாண்டிய
வர்க்குத் தீமையும் புரிபவன் தான் கடவுளா? ‘அன்பே சிவன்’
என்று வர்ணிக்கப்படும் உலக நாயகனின் உத்தமப்புத்திரன் இப்படி இருக்கலாமா?
2) குளிக்கப் போகிறாள் பார்வதி. குலவப் போகிறான் பரமசிவன்; தடுத்து நிறுத்துகிறான் ‘திடீர்’ப்பிள்ளை; தலையைக்கொய்கிறான் தகப்பனாக வேண்டியவன்.
3) அழுக்கில்- அதுவும் சதை இன்பத்தில் புதையத் துடிக்கும் கடவுள் கதைகள் மக்களைப் பண்படுத்துமா?
இப்படியே கேள்விகளைப் பாய்ச்சி, தோல்விகளைச் சுமத்தி, பக்தர்களின் முகங்களில் விளக்கெண்ணெய் வடிக்க நமக்கு ஆசை இல்லை. இவ்வளவு, ஆபாசத்தைக் கும்பிடக் கோயிலுக்குச் சென்று நாம் “தாசிப்புத்திரர்” ஆகலாமா? பக்தர்களே சிந்தியுங்கள்!
உள்ளதற்குத்தான் ஒரு வரலாறு ; இல்லாததற்குக் கணக்கற்ற கதைகள். முக்கண்ணனின் முதல் மைந்தனுக்கு இன்னொரு பிறவிக் கதையும் உண்டு.
அது – இது:
கசமுக அசுரன் என்பவன் இறவா வரம் பெற்றவன். தேவர் களை வம்புக்கிழுத்து விளையாடுவதே இவனின் பொழுதுபோக்கு.
தன்னைச் சாகடிக்க யாருமில்லை என்ற தைரியம் வேறு இந்த அசுரனுக்கு! “நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்” என்று கண்ணாமூச்சி காட்டினான் தேவர்களிடம். வெறுப்பும், கொதிப்பும் கொண்ட தேவர் குலம், திணறித் திண்டாடிச் சிவனை அடைக்கலம் கொண்டது.
தம்பதி சமதராகத் தோட்டம் ஒன்றில் ஆட்டம் போட்டுக்கிடந்த உலகநாயகனும் நாயகியும், தற்காலிகமாகத் தங்கள் செயல்களை ஒத்தி வைத்து, வதைபடும் தேவர் இனத்தைப் பரிசீலித்தனர். அப்போது அவர்கள் கண்களில் – கலவி புரியும் யானைகளின் காட்சி தென்பட்டது.
அவ்வளவுதான்!
சிவனும் பார்வதியும் சும்மா இருப்பார்களா? உடனே யானையாக உருமாறி விட்டனர்!
பிறகென்ன! இரும்பும் காந்தமும்தான்!!
இதன் விளைவு-பிறந்தார் பிள்ளையார்.
பிறந்தவர் யானை முகமும், மனித உடலுமாக இருந்தார்.
(ஆதாரம்: வலிவலம் கோவில் சிவனைப் பற்றி திருஞானசம்பந்தர் “பிடியதன் உருவுமை” என்று தொடங்கிப் பாடிய தேவாரப் பாடல்)
சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பாடிய அந்தப் பாடல் வருமாறு;
“வடிகொடு தனதடி வழிபடுமவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை”
- என்பதாகும்.
தோப்புக்கரணம் போட இடுப்பில் துண்டைக்கட்டி கைகளை மாறுகை போட்டு காதுகளைப் பற்றியழும் பக்திப் பழங்களுக்குச் சில கேள்விகள்:
1) ஒரு கடவுளின் பிறவிக்கு மூன்று கதைகளா? அதுவும் இப்படி “கொக்கோக” விளக்கங்களாகவா இருப்பது?
2) “செங்கருமங் கைகூடும்” என்று பக்தர் கூட்டத்தால் புகழ்ந்து போற்றப்படும் தெய்வத்திற்கு ஜீனியர்களாக இருக்கும் தேவர்கள் அசுரனுக்குப் பயந்து ஓடுவது எந்த வகையில் ஏற்புடையது?
3) உலகத்தை ரட்சித்து, அருள்பாலிக்கும் கடவுள் தம்பதிகள் , மிருக இச்சை கொண்டது மாத்திரமல்லாமல் மிருகமாய் மாறியும் இணைந்து நனைந்த இழிவுக்கதை பக்தியைப் பரப்புமா? பக்தனைப் படுக்கை அறைக்கு விரட்டுமா?
4) இந்தக் கடவுளைப் பூஜிக்கும் சமஸ்கிருத , மந்திரங்களில் யானைத்தலையன், கொழுக்கட்டைக் கையன், முறக்காதுப் பையன், சப்பாணி இடூப்பன் , சால்வயிற்றுக் கடவுள். கருத்துப் போன உடலான், ஒத்தைப்பல்லன் என்றெல்லாம் பூஜிக்கிறார்கள். இது பரவசத்திற்குரியதா? பரிகாசத்திற்குரியதா?
5) தாயைப் போல அழகி வேண்டும் என்று அலைந்து , அலுத்த தனதுபிள்ளையைஆற்றங்கரையில் குந்தி ‘சுயம்வரம்’ நடத்த பார்வதி அனுமதித்ததால்தான், அரசமர நிழலில்-குளக்கரையில் பிரம்மச்சாரியாய் கிடக்கிறான் விநாயகன்.
இவனைப் போய்க் கும்பிடப்போகும் பக்தசிகாமணிகள், பார்வதிபோல் தங்களது மனைவியின் தோற்றம் இருந்துவிட்டால் எவ்வளவு அபாயம்? விநாயகக் கடவுள் வேண்டுகோளைப் புறக்கணித்தால் வாழ்வில் விக்னம் ஏற்பட்டுவிடாதா? அதற்காக மானத்தை மறந்து, இயற்கை ஆக எந்தப் பக்தராவது இந்தக் காலத்தில் தயாராக முடியுமா? பக்தர்களே சிந்தியுங்கள் !
நன்றி எஸ் .முத்துகுமரன் 

No comments:

Post a Comment