Sunday, September 4, 2011

விண் சுற்றும் பெண்

விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மூன்று பெண் விஞ்ஞானிகளை நாசா அனுப்பியுள்ளது.

இதன் மூலம் விண்வெளி நிலையத்தில் ஒரே நேரத்தில் நான்கு பெண்மணிகள் இருக்கப்போகிறார்கள்.

விண்வெளியிலும் தங்கள் உரிமையை நிலைநாட்டி விடுவார்கள் பெணகள் என நாசா விஞ்ஞானிகள் வேடிக்கையாக பேசி வருகிறார்கள்.

ஃபுளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று புறப்பட்ட டிஸ்கவரி விண்கலத்தில்
அமெரிக்காவைச் சேர்ந்த மெட்காஃப் லிண்டென்பர்கெர் மற்றும் ஸ்டெஃபானி வில்சன், ஜப்பானைச் சேர்ந்த நவோக்கா யமாஸாகி ஆகியோர் விண்வெளிக்கு பயணமானார்கள்.

ஏற்கனவே இரண்டு ரஷ்ய விஞ்ஞானிகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை விண்வெளி நிலையத்துக்கு சென்ற அமெரிக்க பெண்மணி டிரேசி கால்ட்வெல் டைசன் தற்போது விண்வெளி நிலையத்தில் உள்ளார்.

இவருடன் சேர்த்து நான்கு பெண்களும் மெஜாரிட்டி பலத்துடன் விண்வெளி நிலைய வேலைகளை கவனிக்கப் போகிறார்கள்.

முடிவு பெறும் நிலையில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் இறுதிகட்டப் பணிகளை இவர்கள் மேற்கொள்வார்கள்.

13 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து, பல்வேறு சோதனைகள் மற்றும் பழுது நீக்கும் வேலைகளிலும் இவர்கள் ஈடுபட திட்டமிட்டுள்ளார்கள்.

ஒரே நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நான்கு பெண்கள் தங்குவது இதுவே முதல் முறையாகும் என்பதால் இது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
 

No comments:

Post a Comment