Monday, September 26, 2011

பசுமைதாய்க்கு அஞ்சலி

40  மில்லியன் மரங்களின் தாய் வங்காரி மாத்தாய் , சுற்று சூழல் சீர்கேடு குறித்து அதீத அக்கறை கொண்டவர் .கென்யா நாட்டை சேர்ந்தவரான மாத்தாய் , ஒரு பேராசிரியராக ,அரசியல் வாதியாக ,பசுமைதாயாக   பன்முகத்தன்மையோடு , பசுமைக்கும் ,மானுட வர்கத்தின் மேன்மைக்கு பாடாற்றினார் .


அவரின் வாழ்க்கை குறிப்பு சுருக்கமாக : 

  • 1940: கென்யாவில் உள்ளா கேரி என்கிற கிராமத்தில் பிறந்தார் 
  • 1964: அமெரிக்க பல்கலை கழகத்தில் இளங்கலை உயிரியல் பயின்றார்
  • 1966: முதுகலை அறிவியலை , பிட்ஸ் பெர்க் பலகலைகழகத்தில் பயின்றார்
  • 1971: நைரோபி பல்கலை கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்  ,கிழக்கு  ஆசியாவிலேயே  முனைவர் பட்டம் பெற்ற  முதல் பெண்மணி இவரே  
  • 1997: தனது "பசுமை வளைய இயக்கம்  (Green Belt Movement  ) நிறுவினார்
  • 2002: கென்யா பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் .
  • 2004: சமாதானத்திற்கான நோபெல் பரிசு வென்றார் .
  • 2011: செப்டம்பர் 25  அதிகாலை தனது 71  வது வயதில் இயற்கையோடு கலந்து போனார் .


மரம் ,மனிதம் ,இரண்டிற்காகவும்
தன்னை அர்பணித்த அந்த பசுமைதாய் இன்று 25 / 09 / 2011  அன்று  புற்று நோயினால் இறந்து போனார் .இல்லை இயற்கையோடு இரண்டற கலந்து  போனார் .

1 comment:

சிந்தனை செல்வன் said...

அன்புள்ள அண்ணா, மாத்தாய் படம் பார்த்தேன். இன்றைய உண்மையான தேவை.

Post a Comment