Monday, September 19, 2011

அணு மின் நிலையம் அவசியம்தானா ?

ஹீரா ஷிமா , நாகசாகி , செர்நோபில் ,அமெரிக்காவின் மூன்று மைல் தீவு ,இந்தியாவில் நரோரா ஆகிய நகரங்களில் நடந்த அணு உலை விபத்து மற்றும் வெடிப்பை  தொடர்ந்து , உலகமே இன்று அணுகுண்டு , அணு பயன்பாட்டில் விளையும் ஆற்றல் குறித்து எதிர்ப்பும் ,மறுப்பும் தெரிவித்து வருகிற நிலையில் தமிழகத்தில், நெல்லை மாவட்டம் ,கூடங்குளத்தில் ,13 ,171  கோடி மதிப்பில் செயல் பட இருக்கிற அணு உலைக்கு அரசியல் தலைவர்கள் ,மற்றும் ,சமூக ஆர்வலர்கள் ,பொது மக்களிடயே கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது .இது  இந்திய அரசுக்கு பெரும் சங்கடத்தை  உருவாக்கி  இருக்கிறது .மக்களின் தொடர் உண்ணாவிரதம் தமிழக அரசை திணறடித்து கொண்டிருக்கிறது .மக்களில் ஒருவராக , சமூக  அக்கறையின் வெளிப்பாடாக அணு உலை குறித்தும் ,அதன் அவசியம் ,அதனால் ஏற்ப்படும் நன்மை தீமைகள் குறித்து இக்கட்டுரையில் சற்று அலசுவோம் .

அணு என்பது மிக மிக நுண்ணிய துகள் என்பதை  நீங்கள் அறிவீர்கள்  .ப்ரோடான் , எலெக்ட்ரான் ,நியூட்றான் இவைகளின் சேர்கையால் அணு உருவாகிறது , அணுவின் சேர்க்கையால் பருப்பொருள் உருவாகிறது .








 அணுவிற்குள் இருக்கும் நியூட்றான்    1930  ம் வருடம் கண்டு பிடிக்கப்பட்டதிலிருந்து இந்த அணுஆற்றலை பயன் படுத்த வேண்டும் என்கிற எண்ணம் கூடவே உதிக்க ஆரம்பித்து விட்டது. உரேனியம் ( uranium ),ப்ளுடோனியும்( plutonium ) அணுக்கள்  பிளக்கப்படும் போது  3500   - 4000  டிகிரி  செல்சிஸ் வெப்பம் உண்டாகிறது , இந்த வெப்பத்தை  பயன் படுத்தி நீர் சூடேற்றபட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது  .சரி எதற்காக இந்த அணு உலைகள் தேவை என பார்ப்போம் .


இந்தியாவில் 1947  ம் வருடம் 1 ,300  மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டது , இப்போழ்து 1  லட்சத்து 73  ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது , 2030  ம்   ஆண்டில் நான்கு லட்சம் மெகா வாட்டாக இருக்கும் .

வளர்ந்து வரும் தொழிற் தேவைகளை ஒன்றியும், பெருகிவரும் மக்கள் தொகையை ஒன்றியும் நாம் அதிபட்சமான மின்சாரத்தை தயாரிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம் .சரி மின்சாரம் தயாரிக்க அணு மின்நிலையம் ஒன்றுதான் வழியா ?

இல்லை , பல முறைகளில் மின்சாரம் தயாரிக்கலாம் .

1 ) புனல் மின் நிலையம் ( ஹைட்ரோ பவர் பிளான்ட்ஸ் )
இவை நீரை நீர் தேக்கங்களில் தேக்கி வெகு வேகமாக வழியவைத்து அந்த உந்து சக்தியால் டுர்பைனை சுழல வைத்து ,பின் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டரை சுழல வைத்து மின்சாரம் தயாரிக்க ப்படுகிறது .இவை பெரும்பாலும் மழையை மற்றும் பருவகாலங்களை நம்பி இருக்கின்றன  .

2 ) அனல் மின் நிலையம் : ( தெர்மல் பவர் பிளான்ட்ஸ் )
நிலக்கரியை கொண்டு பாயலேரில் இருக்கும் நீரை சூடாக்கி , நீராவியை உண்டு பண்ணி அதை ஒரு கூம்பில் வேக மாக பீய்ச்சி அடித்து அதன் உந்ததால் டுர்பைனை சுற்றவைத்து மின் உற்பத்தி செய்யப்படுகிறது .

3 ) அலை மின் நிலையம் ( திடல் பவர் பிளான்ட்ஸ் )

இவை கடலோரங்களில் உருவாகும் அலையின் விசையால் டுர்பைனை சுழல வைத்து மின்சாரம் தயாரிக்கும் முறை இதில் பலன் சற்று குறைவாகவே உள்ளது .



4  ) காற்றாலை ( வின்ட் மில் ) :

மலை அடிவாரங்களில் ,நல்ல காற்று வீசும் பகுதிகளில் இந்த காற்றாலைகள் நிறுவப்படுகின்றன , காற்று வேகமாக வீசும்போது ,விசிறி சுழன்று அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஜெனெரேட்டரை சுழல வைத்து மின்சாரம் தயாரிக்கபடுகிறது .இது பெரும்பாலும் பருவ காலத்தை நம்பியே செயல் படுகிறது .
5 ) பரிதியாற்றல் மின்சாரம் ( சோலார் பவர் ) :

சிலிகான் சில்லுகள் பதித்த இந்த அட்டையை வெய்யலில் வைத்து அதன் மூலம் மின்சாரம் பெரும் இந்த முறை நவீன படுத்தபடாமல் பாழாய் கிடக்கிறது .


மின்சாரம் தயாரிக்க இத்தனை முறைகள் இருக்கும் போது அணுமின் உலையை தேர்ந்தேடுப்பதேன் ?

மேற் சொன்ன முறைகள் பெரும்பாலும் பருகாலங்களை சார்ந்தும் ,பெருமளவிலான எரிபொருளை செலவழித்தும் பெறப்படுகிறது உதாரணமாக இந்தியாவில் எரிபொருளின் இருப்பு மிக குறைவாகவே உள்ளது ,ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கு 43  லட்சத்து 80  ஆயிரம் டன் நிலக்கரி அல்லது 20  லட்சம் டன் எண்ணை தேவைப்படுகிறது .எனவேதான் அணுமின் உலை நிறுவப்படுகிறது என மின் உலை அறிஞர்கள் சொன்னாலும் மின்சாரம் தேவை என்பதற்காக மிக அபாயகரமான ஒன்றை மடியில் கண்டிகொண்டு திரிவது நியாயமா ? என்கிற கேள்வியும் கூடவே எழுகிறது .

அணு உலை வரலாறு :  1942  இல் இரண்டாம் உலகப்போரின் போது சிகாகோ பல்கலை கழகத்தில்"சிகாகோ   பைல் 1  " என்கிற அணு உலையை என்ரிகோ பெர்மி ஆரம்பித்தார் .1954  இல் ரஷ்யாவில் ஆப்மிளிக் பவர் பிளான்ட் நிறுவப்பட்டது .இன்று உலகம் முழுக்க 400  க்கும் மேற்பட்ட அணு உலைகள் உள்ளன .அதில் அமெரிக்காவில் 108   ம்  , ஜெர்மன் , பிரான்ஸ் நாடுகளில் தலா 60  , 60  ம்  , உள்ளன . இந்தியாவில் மட்டும் 20  அணு உலைகள் உள்ளன .

கர்நாடக - கைக்காவில் - 4  ம் , குஜராத் - கக்ராபார் - 2  ம், தமிழ் நாடு - கல்பாக்கம் - 2  ம் , ராஜஸ்தான் -ரவாத்பாதாவில் - 6  அணு உலைகளும் உள்ளன .மேலும் ,ராஜஸ்தான் ,குஜராத் ஆகிய இடங்களில் தலா 2  கட்டுமான நிலையில் உள்ளன . கூடன் குளத்தில் 2  உலைகள் தயாராக உள்ளன , நான்கு அனுமதி பெறப்பட்டுள்ளது .மேலும் இந்தியாவிலேயே ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்கிற திறனுடன் கூடன் குளத்தில்தான்  அணு உலை அமைக்கப்பட்டுள்ளது .

என்ன ஆபத்து நேர்ந்து விடும் ?  அணுவின் கதிர் வீச்சை போன்ற ஆபத்தான ஒன்று பூமியில் இல்லை என்றே சொல்லலாம் .அதற்கு உதாரணமாக ஹிரோஷிமா , செர்நோபில் நிகழ்வை திரும்பி பார்க்கலாம் .ஜப்பான் சரணடைய தயாராக இருந்த போதும் ,அமெரிக்கா அணு குண்டை சோதனை செய்து பார்பதற்கெனவே குண்டை போட்டது .விளைவை பாருங்கள் 





உரேனிய ,ப்ளுடோநியங்களை கொண்டு அணு உலை மட்டுமல்ல , அணுகுண்டும் செய்து வீசி மனித குலத்தை அழிக்க முற்படலாம் , நம்மிடம்தாம் அணு குண்டு இருக்கிறதே வீசி பார்க்கலாம் என்கிற மனநிலைக்கும் தள்ளப்படலாம் , தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் இங்கு அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்து விட்டால் எஞ்சி இருப்பவரை எண்ணுதல் அரிது .செர்நோபில் அணு உலை வெடித்ததன் பயங்கரத்தைப்பாருங்கள்.
 


 பொதுவாக ஒரு அணு உலையின் ஆயுட்காலம் ஐம்பது வருடங்கள்தான் ,அதன்   பின் அதை பூமியில் வைத்து புதைத்து பல ஆயிரம் வருடங்கள் பாதுகாக்க வேண்டும் ,சுனாமி , பூகம்பம் , தீவிரவாத தாக்குதலால் அணுஉலை வெடிக்க நேர்ந்தால் , விளைவு பல லட்சம் வருடம் கூட தாக்கும் .உரேனியம் அணுவின் அரை ஆயுட்க்காலமே 2  லட்சம் வருடம் , ஒரு வேலை இந்தியாவில் இருக்கும் ஏதேனும் ஒரு அணு உலையை மூடினால் கூட 2  க்க வேண்டும் , வெடித்தால் இரண்டு லட்சம் வருடம் வரை கதிர் வீச்சை கக்கி கொண்டே  இருக்கும் . அது சரி உரேனியும் இயற்க்கையாகத்தானே  கிடைக்கிறது அப்பொழுது இல்லாத கதிர் வீச்சா இப்பொழுது வந்து விடப்போகிறது என்றும் சிலர் கேட்பதுண்டு .உரேனியம் பல தாதுக்களுடன் கிடைக்கும் போது கதிர்வீச்சின் தன்மை மட்டுபட்டதாகவே இருக்கிறது .ஒரே இடத்தில் அவை குவியும் போது ஆற்றல் அதிகம் பெறுகின்றன .அணு கழிவை அகற்ற போதுமான தொழில் நுட்பம் இல்லை , மறு சூழ்ச்சி , கடலுக்கடியில் புதைப்பது இதுவே நடை முறையில் உள்ளது அணு உலையிலிருந்து வெளியேறும் காதற்று மற்றும் , நீரில் கதிர் வீச்சு தன்மை இருக்கும் .கடல் நீர்தான் அணுஉலையை குளிர்விக்க பயன்படுத்த படுகிறது .இது மீண்டும் கடலுக்கு செல்கிறது இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது .கதிர்வீச்சால் பாதிக்க படுகிறவர்களுக்கு , புற்று நோய் , மனவளர்ச்சி இன்மை , குழந்தை இன்மை என பல பாதிப்புகள் ஏற்படலாம் .இத்தனை அபாயங்களை உள்ளடக்கிய மனித குலத்தையே பூண்டோடு அழித்து விடக்கூடிய இந்த ஆபத்தை இயற்கையே அணுவுக்குள் மறைத்து வைத்திருக்கும் போது நாம் ஏன் அதை தோண்டி ,சீண்டி வம்பை விலை கொடுத்து  வாங்க வேண்டும் . தற்போது இருக்கும் அனல் மின் நிலையங்களின் வழியாக கிடைக்கும் மின்சாரம் 30  சதவிகிதம் கடத்தி செல்லும் போதே வீணாகிறது அந்த வீணாதலை தடுக்க முயற்சித்தல் , சூரிய மின்சாரம் ,மற்றும் மாற்று சக்தி முறைகளில் மின்சாரம் தயாரித்தல் போன்ற       வழியை கண்டறிந்து நமது மின்தேவையை பூர்த்தி செய்ய அரசும் , அறிஞர்களும் முன்வரவேண்டும் .ஜப்பானின் புஹுஷிமா அணு உலைவெடித்ததை கேள்வி பட்டதும் ,ஜெர்மன் அரசு தானாக முன்வந்து அணுஉலைகளை தன்  நாட்டில் மூட உத்தரவிட்டது மக்கள் போராட்டம்  ஏதுமின்றி .அதை போல இந்திய அரசும் பின் நடக்கவிருப்பதை இப்பொழுதே கணித்து உண்ணாவிரதம், போராட்டம் நடத்தும் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  அணு உலையை மூடி மக்கள் நல அரசு என நிருபிக்கும் என நம்புவோமாக !




வே  .தனசேகர்  



3 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

காலத்துக்கு ஏற்ற தேவையான பதிவு.

முனைவர் இரா.குணசீலன் said...

அடக்கம் செய்யவா அறிவியல் என்னும் எனது இடுகையைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்
அன்பரே..

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_4313.html

Thennavan said...

அருமையான பதிவு.

Post a Comment