1. Prey - மடிக் கணினிகள் திருடப்பட்டுவிட்டால் திருடியவர்
இணையத்தை பயன்படுத்தும் போது அது எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க
உதவுகிறது இந்த மென்பொருள்.
நிறுவியதும் கணினியில் மறைந்துகொள்ளும் இந்த மென்பொருளை உங்களுக்கு தேவையான நேரத்தில் இணையத்தின் மூலம் ஆக்டிவேட் செய்ய முடியும்.
திருடியவர் குறிப்பிட்ட மடிக்கணினியில் இணையத்தை பயன்படுத்த தொடங்கியதும் உடனே அக்கணினி எங்கிருக்கிறது என்பதையும் மற்றும் ஏனைய தகவல்களையும் தந்து விடும்.டவுண்லோட் செய்வதற்கு - http://preyproject.com/
நிறுவியதும் கணினியில் மறைந்துகொள்ளும் இந்த மென்பொருளை உங்களுக்கு தேவையான நேரத்தில் இணையத்தின் மூலம் ஆக்டிவேட் செய்ய முடியும்.
திருடியவர் குறிப்பிட்ட மடிக்கணினியில் இணையத்தை பயன்படுத்த தொடங்கியதும் உடனே அக்கணினி எங்கிருக்கிறது என்பதையும் மற்றும் ஏனைய தகவல்களையும் தந்து விடும்.டவுண்லோட் செய்வதற்கு - http://preyproject.com/
2 .Aerofoil
மடிக்கணினியின் பேட்டரி வேலை செய்யும் நேரத்தை 10% வீதத்திலிருந்து 25 % வீதம் வரை அதிகரிக்கின்றது இந்த மென்பொருள்.
கணினியின் சக்தியை விரயமாக்கும் தேவையில்லாத சிலவற்றை நிறுத்தி வைப்பதன் மூலம் இதை செய்கிறதாம். உதாரணமாக விண்டோஸ் 7 இயங்குதளத்தில் Aero glass interface, the Windows sidebar, muting the sound போன்றவையாகும்.
குறிப்பு - இந்த மென்பொருளை நிறுவ முன்னர் இதே போன்று செயற்படும் வேறு மென்பொருட்கள் கணினியில் இருந்தால் அவற்றை நீக்கிவிடுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்
டவுண்லோட் - http://silentdevelopment.blogspot.com/2010/05/aerofoil-151-released.html
3 . AutoSensitivity
கணினியில் மவுஸின் தொடுதிறனை (Sensitivity ) கட்டுப்படுத்துவதற்கு உதவுகிறது இந்த மென்பொருள்.
Touchpad உள்ள டிவைஸ்களையும் இதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
கணினியில் இந்த டூலை நிறுவுவதற்கு
.NET Framework 3.5 or 4.0. தேவையாகும்
டவுண்லோட் இணைப்பு - http://autosensitivity.codeplex.com/
4 .TouchFreeze
மடிக்கணினிகளில் சில மென்பொருட்களை பயன்படுத்தும் போது தவறுதலாக Touchpad இல் விரல்கள் பட்டு கிளிக் செய்வதன் மூலம் அவை நிறுத்தப்பட்டுவிடக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும்.
இவற்றை தடுப்பதற்கு உதவுகிறது இந்த மென்பொருள்.
இதை நிறுவியதும் கீபோட்டில் டைப் செய்துகொண்டிருக்கும் போது தற்காலிகமாக கிளிக்கை நிறுத்தி வைக்க முடிகிறது.
செட்டிங்குகள் எதுவும் இல்லாத இந்த மென்பொருளை இயங்கச் செய்ய நிறுத்திவிடுவதை மாத்திரம் டாஸ்க்பாரில் செய்துவிடலாம்.
டவுண்லோட் செய்வதற்கு இங்கே - http://code.google.com/p/touchfreeze/
5 . Core Temp
இதன் மூலம் கணினியின் வெப்பநிலை போன்ற தகவல்களை பெற்றுக்கொள்ள முடிகிறது. லேப்டாப்களின் தரம் மற்றும் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அது வேகமாகவே சூடாகவும் செய்கிறது.
வெப்பமே கணினியின் ஹாட்வேர்களுக்கு முதல் எதிரி, ஆகவே தான் மடிக்கணினியை தொடர்ச்சியாக பாவிப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை அடைந்ததும் சிறிது நேரம் அணைத்து விட்டு சூடு தணிந்ததும் பின்னர் ஆன் செய்து பாவிக்கலாம்.
இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொண்டால் கணினியின் வெப்பநிலையை Celsius அல்லது Fahrenheit அளவுகளில் காட்டுகின்றது.
டவுண்லோட் செய்வதற்கு - http://www.alcpu.com/CoreTemp/
No comments:
Post a Comment