Saturday, October 30, 2010
அயோத்தி தாசப் பண்டிதர் விருது
தமிழகத்தில் தலித் தலைவர்களால் வெகுவாக அறியப்பட்டவர் அய்யா வேணுகோபால் . தமிழக அஞ்சல் துறையின் தலைமை தபால் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற திரு .வேணுகோபால் அவர்கள் , பஹுஜன் சமாஜ் கட்சியின் ,மாவட்ட தலைவராக பணியாற்றி ,கன்ஷிராம் அவர்களின் அன்பை பெற்றவர் , தற்பொழது இந்திய குடியரசு கட்சியின் மாநில துணை தலைவராக உள்ளார் .தனது அய்ம்பது வருட சமுக பணிக்காக இந்திய குடியரசு கட்சியின் பாலா சாஹிப் பிரகாஷ் அம்பேத்கர் அவர்களால்மற்றும் டாக்டர் செ.கு .தமிழரசன் ஆகியோரால் அம்பேத்கர்" அருந்தொண்டர் விருதும்" ,தலித் சாகித்ய அகாடெமியின்" அம்பேத்கர் பெல்லோ ஷிப்" விருதையும் மற்றும் பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார் .விழுப்புரம் மாவட்டம் ,கள்ளகுறிச்சி ,கே .சி .எஸ் .திருமண மண்டபத்தில் செம்மொழி இலக்கிய பேரவையின் சார்பில் 30/10/10 அன்று அயோத்தி தாச பண்டிதர் விருது முன்னாள் மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் திரு .வேங்கடபதி அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டார் .இந் நிகழ்ச்சியில்" நம் குடியரசு "பத்திரிகையின் ஆசிரியர் மனமோகன தாஸ் ,மாரியப்பன் ,சிறுபான்மை வாரிய உறுப்பினர் புத்த தம்மா மௌரியா , டாக்டர் மகுடமுடி,டாக்டர் உதயகுமார் ,மற்றும் பல தமிழ் அறிஞர்கள் ,அகில உலக தமிழ் கவிஞர் சங்க செயலாளர் ,கவிஞர் சீதா ,ஆசுகவி ஆராவமுதன் ,மு .வரதராசனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
ஃபேஸ்புக்கில் முகம் பார்க்கலாம்
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர் 'மார்க் சூக்கர்பெர்க்' என்பவரால் விளையாட்டாக உருவாக்கப்பட்டது தான் இந்த பேஸ் புக்.
"என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு?" என்று தன்னை விட்டுப்போன பெண்ணிற்க்காக தனக்குத்தானே கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருக்காமல், காதலியின் நினைவிலிருந்து தன்னைக் காத்துக்கொள்வது எப்படி என்று என ஒருநாள் இரவு தீவிரமாய் யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் மார்க் சூக்கர்பெர்க்கிற்கு இந்த யோசனை பளிச்சிட்டது. அவர் படித்துக் கொண்டிருந்த பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் இருந்தது, அதாவது அங்கு படிக்கும் மாணவர்கள், பணிபுரியும் பேராசிரியர்கள் பற்றிய விபரங்கள் கொண்ட புத்தகம் ஒன்றை மனவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பல்கலைக்கழகம் கொடுத்துவந்தது. அந்த புத்தகத்தை பேஸ்புக் எனப் பெயரிட்டு மாணவர்கள் அழைப்பது வழக்கம் இந்த ஐடியவைத்தான் சூக்கர்பெர்க் எடுத்துக்கொண்டு சிந்திக்கத் தொடங்கினார். தன்னுடைய மாணவ நண்பர்களான எட்டுவர் டோ சவேரின், டாஸ்டின்மொச்கோவிட்ஜ், கிரீஸ்ஹ்யூக்ஸ் ஆகியோரை இணைத்த்துக்கொண்டு இணையத்தளம் ஒன்றைத் துவக்கினார். முதலில் தமது பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டு தளம் உருவாக்கப்பட்டது. கிடைக்கும் வரவேற்பை பொறுத்து விரிவு படுத்தலாம் என்பது மார்க்கின் திட்டம். இப்பொழுது 13 வயது நிரம்பியிருந்து ஒரு மின்னஞ்சல் முகவரி பெற்றிருந்தால் போதும் பேஸ்புக் உறுப்பினராகிவிடலாம். ஆம்! இன்று பள்ளி மாணவர்கள் வரையில் இந்த தளம் விரிவு படுத்தப்பட்டு நீள்கிறது.
'முகம் பார்த்த கண்ணாடி ரசம் போனதிப்போது' என்று காதல் தோல்வியால் பிதற்றாமல், உலகின் எந்த முனையில் இருக்கும் எந்த ஒரு நபரின் முகத்தைக் காணும் கண்ணாடியாக பேஸ் புக்கை இந்த இளைஞன் விளையாட்டை உருவாக்க, இந்த இணையத்தளம் இப்போது அவரை உலகப் பணக்காரர்களில் முக்கியமான ஒருவராக உருவாக்கி இருக்கிறது. அதிகாரப்பூர்வமாக 2009 ல் இலாபம் ஈட்டும் ஒரு நிறுவனமாக மாறினாலும் இதற்கு முன்னரே உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் இதன் மீது ஒரு கண் வைத்து விலைபேசி தன்னகப்படுத்த போட்டி போட்டன. சாப்ட்வேர் ஜாம்பவான் 'மைக்ரோ சாப்ட்' பெரும் முதலீடு செய்துள்ளது. வணிக ரீதியாக வெற்றிபெற்ற எம்.டி.வி.நிறுவனத்திற்கு இணையாக பேஸ்புக்கை வாங்குவதற்கு போட்டி எழுந்துள்ளது.
இன்றைக்கு கூட்டு செயல்பாடுகளிலிருந்து விலகிய மனிதனுக்கு தனக்கென ஒரு சமூக அமைப்பை, குழுவை உருவாக்கிக்கொள்ளத் தேவையான வசதிகளை இதுபோன்ற சமூக வலைப்பின்னல்கள் செய்கின்றன. தனிப்பட்ட பிரச்சனைகள் மட்டுமன்றி சமூகப் பிரச்சனைகளையும் இங்கு பகிர்ந்துகொள்ளப்படுகிறது.
நம்நாட்டைப் பொறுத்தவரை கணினிகளின் பயன்பாடு தற்போதுதான் வளர்ந்து வருகிறது என்றாலும் மொபைல் போனின் பெருக்கம் ஆதிக்கம் பேஸ்புக் உறுப்பினர்களின் எண்ணிக்கையினை நாள்தோறும் அதிகப்படுத்திக் கொண்டு வருகிறது. இப்போது சுமார் முப்பது கோடி மொபைல் போன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது அடுத்த ஆண்டு அதாவது 2011 ல் அறுபது கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் வெறுமனே பத்து சதவீதம் பேர் பேஸ்புக்கைப் பயன்படுத்தினால் கூட சுமார் ஆறு கோடி பேர் என்று உலகின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் இந்தியர்களின் பங்கு கணிசமானதாக உயர்ந்திருக்கும். உலகின் மற்ற நாடுகளை எல்லாம் பின்தள்ளி விட்டு இந்தியர்கள் இதை ஆக்கிரமிக்கப் போகிறார்கள் என்பது நிச்சயம். அதனால் தான் இந்தியாவை இலக்காகக் கொண்டு இந்திய மொழிகளில் தமிழ் மட்டுமல்லாது பஞ்சாபி, பெங்காலி, தெலுங்கு, மற்றும் மலையாளம் என்று பேஸ்புக் இன்று வலம் வருகிறது. விரைவில் வேறு சில இந்திய மொழிகளும் பேஸ்புக்கில் இடம் பெறலாம். அந்த நோக்கில் தான் ஆசியாவிலேயே முதலாவதாக ஐதராபாத்தில் தனது அலுவலகத்தைத் திறக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
தன்னைத் தொலைத்த தந்தையை 37 ஆண்டுகளுக்கு பிறகு தனயன் பேஸ்புக் மூலம் கண்டுபிடித்தான்.
தன் மின்னஞ்சல் முகவரியினை எழுதி கண்ணாடி பாட்டிலில் அடைத்து கடலில் வீசி, அதை 33 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுத்த நபர் தொலைபேசியில் தொடர்புகொண்டு நட்பு பாராட்டிக்கொண்டிருப்பதெல்லாம் நம்மை வியப்பிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்தினாலும்,"தன் பிள்ளைகள் பேஸ் புக்கில் தொலைந்து போய்விடக்கூடது" என்று அமெரிக்காவின் முதல் பெண்மணி மிச்சிலி ஒபாமா அஞ்சுவதைப் போல நாம் அனைவருமே கொஞ்சம் கவனமாய் இருப்பது நலம்.
பொதுவாக பேஸ்புக் உபயோகிபபவர்களாகிய நாம், நம் பிள்ளைகள் கீழ் கண்டவற்றில் கவனமாய் இருப்பது மிக அவசியம்.
- நண்பர்களாக வருபவர்களின் உரையாடல் நல்ல முறையில் இருக்கிறதா என்பதை உணர வேண்டும்.
- நமக்கு வேண்டாம் என்று ஒதுங்கி விட்டாலும், நம்மைப் பற்றிய தகவல்கள், புகைப் படங்கள், தொலைபேசி எண்கள் ஆகியவை நீக்கமுடியாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளதால், எனவே தனிப்பட்ட தகவல்களை பதியும் முன் நன்கு யோசித்து செய்யவேண்டும்.
- பதிவிறக்கம் (download)செய்ய முடியாத படங்களைக் கூட நகல் எடுத்து முறைகேடாக பயன்படுத்தப் படுவதால், படங்களுக்கு உரிய privacy settings கொண்டு பாதுகாக்கவேண்டும்.
- நமக்கு நன்கு தெரிந்த நண்பர்களோ அல்லது உறவினர்களோ அல்லாது பிறர் மூலம் வரும் அழைப்பினை நிராகரிக்கத் தயங்கவேண்டாம்.
- நமக்கு அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து அழைப்புகளில், பாலியல் தொடர்பான உரைகளோ அலது ஏதும் மிரட்டல்களோ இருந்தால் உடனடியாக பெற்றோர் மூலம் காவல் துறையிடம் முறையிடத் தயங்கவேண்டாம்.
கூர்மையான கத்தியினை ஆக்கப் பூர்வமாக தேவைகளுக்கு மிக மிக கவனத்துடன் எப்படி பயன்படுத்துகிறோமோ அதேபோல் நன்மையையும் தீமையும் கலந்த தொழில்நுட்பத்தினை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம்.
Friday, October 29, 2010
எனக்கு இலக்கியம் எப்படி முக்கியமோ... அரசியல் அதைவிட முக்கியம்! - கவிதாயினி தாமரை
"திரைப்படத் துறை மட்டும்தான் ஆணாதிக்கம் நிறைந்ததா? அரசாங்கம், நிர்வாகம், பத்திரிகை, பொறியியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட துறைகள் எல்லாம் 'சரிநிகர் சமானமாக' இயங்குகின்றனவா? வீட்டுச் சமையல் அறையில் ஆரம்பித்து, வான்வெளிப் பயணம் வரை ஆணாதிக்கம் இல்லாத இடமே கிடையாது என்பதைப் புரிந்துகொண்டால், இந்த சிக்கலைச் சமாளிக்கலாம். 'ஆண்கள் எல்லோரும் எதிரிகள், அவர்களை விலக்கிவிட்டு இயங்க வேண்டும்' என்ற வறட்டுப் பெண்ணியம் அல்ல என்னு டையது. 'பெண்ணும் ஒரு மனித உயிரே' என் பதைப் புரியவைத்து, ஆண்களை வென்றெ டுப்பதில் (Winning over) அடங்கி இருக்கிறது வெற்றியின் சூட்சுமம்! எனக்கென்று வரையறைகள், நிலைப்பாடுகள் உண்டு. அவற்றில் சமரசம் செய்துகொள்வது கிடையாது. எந்தத் துறையைக் காட்டிலும் திரைத் துறையில் எனக்கு அதிக மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது. என்னுடைய புரிதலும் அணுகுமுறையும் முதன்மையான காரணங்கள் எனச் சொல்லலாம்!"
"நளினியை விடுதலை செய்வது குறித்து நீங்கள் எடுத்த முயற்சிகள், உங்களுக்கு என்ன மாதிரியான அனுபவங்களைத் தந்தது?"
"நளினி, ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரே தவிர, அவர் கொலையாளி அல்ல. நடக்கப்போகும் விபரீ தத்தைத் திருப்பெரும்புதூர் சென்றடையும் வரை நளினி அறிந்திருக்கவில்லை என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதி தாமஸ் தன் தீர்ப்பிலேயே குறிப்பிட்டார். சந்தர்ப்ப சூழ்நிலையில் குற்றவாளியாக்கப் பட்ட ஒரு பெண்ணை, அவர் இத்தனை ஆண்டுகள் சீரிய முறையில் சிறையில் கழித்த பிறகும் விடுதலை செய்ய மறுப்பது, மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற அடிப்படையில்தான் நளினி விடுதலைக்கான 'கையெழுத்து இயக்கம்' தொடங்கினோம். முதல்வரிடம் விண்ணப்பத்தைக் கையளித்தபோது, அவரும் நளினி விடுதலையையே விரும்புவதாகக் கூறினார். பிறகு, நடந்தவற்றை நாடறியும். நளினி விடுதலையை மறுப்பதற்குப் பின்னணியில், மிகப் பெரிய அரசியல் இருப்பது புரிகிறது. இப்போதும் அரசிடம் நாங்கள் வேண்டுவது, மனித உரிமைகளின் பெயரால் நளினியை விடுதலை செய்யுங்கள் என்பதே!"
"பொதுவாக, எல்லா சினிமாப் பாடலாசிரியர்களும் பாராட்டுக் கவிஞர்களாக மாறிவிட, நீங்கள் மட்டும் அரசுக்கு எதிராகத் தொடர்ந்து இயங்குவது எப்படி?"
"அரசுக்கு எதிராக இயங்க வேண்டும் என்று எனக்கு 'வேண்டுதல்' ஒன்றும் இல்லை. நான் மக்களில் ஒருத்தி. மக்களுக்கு எதிராக அரசு மாறும்போது, அரசுக்கு எதிராக நான் மாறுகிறேன். இந்த அரசு மட்டுமல்ல; வேறு எந்த அரசு வந்தாலும் இதே நிலைப்பாடுதான். அரசு, தமிழினத்துக்கும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும் கேடு செய்யும்போது, எதிர்த்துக் குரல் கொடுக்கிறேன். அது ஒரு படைப்பாளியாக என்னுடைய கடமை. அதுவே தமிழினத்துக்கு நல்லது செய்தால் பாராட்டத் தயங்க மாட்டேன்.
தமிழ்நாட்டில் மரண தண்டனையை ஒழிக்கட்டும். பாராட்டுகிறேன்; அனைவருக்கும் தமிழில் கல்வி கிடைக்கச் செய்யட்டும். பாராட்டுகிறேன். நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்யட்டும். பாராட்டுகிறேன். மதுவை ஒழிக்கட்டும். பாராட்டுகிறேன். ராஜபக்ஷே கும்பலைப் போர்க் குற்றவாளிகள் என்று சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்றட்டும்... பாராட்டுப் பத்திரமே வாசித்து விடுகிறேன்!"
"ஈழப் பிரச்னைக்காகப் போராடியவர்களில் ஒருவர் நீங்கள். மே 18-க்குப் பிறகு, 'இந்த எல்லாப் போராட்டங்களும் வீண்' என்ற அயர்ச்சி ஏற்பட்டதா?"
"போரோடு முடிந்துவிடவில்லையே ஈழத்துக் கொடுமைகள். முள்வேலி முகாம் கொடுமைகள், சரண் அடைந்தவர்கள் சித்ரவதை, பாலியல் வதை, கொடூரக் கொலைகள், தமிழர் நிலம் சிங்களமயமாக்கல் என்று இன்னமும் தொடர்கின்றனவே. புண் பட்டுக்கிடந்தால் வேலைக்கு ஆகாது என்று துள்ளி எழுந்து, இலங்கைப் புறக்கணிப்பு, போர்க் குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றுவது தொடர்பாக முன்னிலும் அதிகமாகவே வேலை செய்கிறேன். ஈழம்... என் நெஞ்சில் ஆறாத, மாறாத காயம்!"
"இன்றைய இந்திய காங்கிரஸ் அரசின் போக்கு குறித்து?"
"இந்திய காங்கிரஸ் அரசு யாருக்காக எப்படி எல்லாம் செயல்படுகிறது, எப்படிப் பெருங் குழுமங்களுக்கு ஏவல் செய்கிறது என்பதை அருந்ததி ராய் போன்ற எழுத்தாளர்கள் பிட்டுப் பிட்டுவைத்துள்ளார்கள். நான் புதி தாகச் சொல்ல வேண்டியது ஏதும் இல்லை. என்னைப் பொறுத்தவரை, இது தமிழினத் தைக் கருவறுக்கப் புறப்பட்ட அரசு. தமிழி னம் வாழ வேண்டும் எனில், தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸை அடியோடு ஒழித்தாக வேண்டும். தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு ஒரு செல்வாக்கு இருக்கும் வரையில்தான், இரு பெரும் கழகங்களும் மாறி மாறி அதைத் தோளில் சுமக்கவும், அதற்காகத் தமிழனைக் காட்டிக்கொடுக்கவும் போட்டியிடும். தமிழர் நலன், தமிழ்நாட்டின் உரிமைகள் இவற்றை முன்னிறுத்தினால் மட்டுமே, தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியும் என்ற நிலையைத் தோற்றுவிப்பது நம் கையில் உள்ளது. அதற்கு முதல் வேலை, காங்கிரஸை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்தெறிவதுதான். நல்ல வாய்ப்பாக சட்டப் பேரவைத் தேர்தல் வருகிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெல்லக் கூடாது என்பதை மனதில்கொள்வோம்!"
"ஈழப் பிரச்னையில் கருணாநிதி - ஜெயலலிதா இருவரின் நிலைப்பாடு குறித்த உங்கள் கருத்து என்ன?"
"ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து, பிணக் குவியல்களின் மீது ஏறி வெறியாட்டம் போட்ட காங்கிரஸின் குருதிக் கறை படிந்த கையை இறுகப் பற்றி, அதை இழந்துவிடக் கூடாதெனத் துடிப்பவர் கருணாநிதி. அந்தக் கையை எப்படியாவது கைப்பற்றத் துடிப்பவர் ஜெயலலிதா. 'ஆமாண்டா, அப்படித்தான் செய்வேன், உன்னால முடிஞ்சதைப் பாரு' என்று தெனாவெட்டாகக் காட்டிக்கொடுப் பார் ஒருவர். 'ஐயகோ, என் செய்வேன், அழிகிறதே என் தமிழினமே!' என்று அழுது கொண்டே காட்டிக்கொடுப்பவர் இன்னொ ருவர். இருவருக்கும் இடையே என்ன பெரிய வேறுபாடு? சாயலில் வேறுபட்டாலும், சாரத்தில் இருவரும் ஒன்றுதான்!"
"'ஈழப் போராட்டத்தின் தோல்வி (அ) பின்னடைவுக்கு எது அல்லது, யார் காரணம் என்று கருதுகிறீர்கள்?"
"சிங்களனுக்கு ஆயுதம் கொடுத்து, ஆதரவு கொடுத்து, உலக நாடுகள் தலையிட்டுக் காப்பாற்றி விடாமல் தடுத்து, வேவு பார்த்து, வழிகாட்டிக் கூட்டுச் சதி செய்து, இனப் படுகொலைப் போரைப் பின்னால் இருந்து நடத்திய இந்திய அரசே முதற்பெரும் காரணம்! எப்பாடுபட்டேனும் இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பைக் கை கழுவிவிட்டு, கபட நாடகங்கள் நடத்தி, இனப் படுகொலைக்குத் துணைபோன தமிழக அரசு, இரண்டாவது காரணம்! இதை வெளிச்சம் போட்டுக் காட்டி, வீதிக்கு வந்து போராடி இனப் படுகொலையைத் தடுக்காமல், 'போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்' என்று அருட்பெரும் பொன் மொழியை உதிர்த்துவிட்டு, உறங்கப் போய் விட்ட எதிர்க் கட்சித் தலைவி ஜெயலலிதா, மூன்றாவது காரணம்! இந்த நாடகங்களை எல்லாம் ஒரு கட்டத்தில் அறிந்துகொண்ட பிறகு, கொதித்தெழுந்து போராடித் தம் தொப்புள் கொடி உறவுகளைக் காப்பாற்றாமல், கையைப் பிசைந்து முகத்தைத் திருப்பிக்கொண்டதோடு முடித்துக்கொண்ட தமிழக மக்கள், நான்காவது காரணம்!"
Thursday, October 28, 2010
அருந்ததி ராய் பேசியதில் குற்றம் இல்லை-திருமாவளவன்
காஷ்மீர் விவகாரத்தில் அருந்ததி ராய் பேசியதில் எந்தக் குற்றமும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவித்த உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராயின் குரலை நெறிக்க முயற்சி செய்யும் மத்திய அரசின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.
பாஜகவை திருப்திப்படுத்துவதற்காக காங்கிரஸ் அரசு இப்படி செயல்படுவது வெட்கக் கேடு. காஷ்மீர் மக்கள் விடுதலையை விரும்புகின்றனர் என்பது எல்லாரும் அறிந்த உண்மை.
அங்கு 2 இஸ்லாமிய பெண்கள் கற்பழிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பிறகுதான் அவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் காஷ்மீருக்கு சென்ற அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவில் நானும் இடம் பெற்று, காஷ்மீரின் நிலைமையை நேரில் கண்டறிந்தேன்.
`இந்திய ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்' என்று அங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் எங்களிடம் வெளிப்படையாகவே தெரிவித்தனர்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சோனியா காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நடத்திய 2 கூட்டங்களில், காஷ்மீர் மக்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்பதையும், அங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதையும் நான் வலியுறுத்தினேன்.
காஷ்மீர் விவகாரத்தில் அருந்ததி ராய் பேசியதில் குற்றம் எதுவுமில்லை. யாரையும் தூண்டுவது போலவும் அவர் பேசவில்லை. காஷ்மீர் மக்கள் மற்றும் ஜனநாயக நாட்டமுள்ளவர்களின் எண்ணத்தின் எதிரொலிதான் அவரது கருத்தில் பிரதிபலிக்கிறது.
காஷ்மீர் விவகாரத்தில் இருந்த மெளனத்தை உடைத்த அருந்ததி ராயை நான் பாராட்டுகிறேன். அவருக்கு இந்த விவகாரத்தில் முழு ஆதரவு அளிக்கிறோம்.
ஜனநாயக அமைப்புகள், தலைவர்கள், அவருக்கு உறுதுணையாக இருந்து பேச்சுரிமையை காப்பாற்ற முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
Wednesday, October 27, 2010
அருந்ததி ராய் மீது வழக்கு ,கைதும் செய்யப்படலாம்
Tuesday, October 26, 2010
Noor Jahan - (Ghazal) - Main Hoon Shaam Ka Raag
Sunday, October 24, 2010
கம்பி இல்லா மின்சாரம்
எங்க பார்த்தாலும் மின்சார கம்பிகள் குறுக்கு நெடுக்காக ,அடிக்கடி அறுந்து விழுந்து எத்தனை விபத்துக்கள் .இதெற்கெல்லாம் விமோசனம் கிடைத்திருக்கிறது .பரிட்சார்த்தமாக கம்பி இல்லா மின்சாரத்தை கண்டு பிடித்திருகிறார்கள். செல் போன் மாதிரி இதுவும் விரைவில் இழை இல்லாமல் கிடைத்து விட்டால் எத்துனை மகிழ்ச்சியாக இருக்கும் .இதோ இந்த சோதனையோட்ட வீடியோவை பாருங்களேன் http://www.youtube.com/watch?v=9hKidYAuWNE.
தொலை பேசி இழையிலிருந்து இலவச மின்சாரம் !
Saturday, October 23, 2010
அடைகின்ற ஆசையில்...............!
அட.,
நீண்ட நாட்களுக்கு பின்
அவன்..
முறுவலிக்கின்றான்
மீசை நெளிய -
மாபாவம் செய்த
சந்நியாசியைப் போல நான்-கூனிக்
குறுகிப் போனேன்.
துள்ளியது இளமைஎன்றால்...,
பொதி சுமப்பது........................?
சன்மார்க்கத்திலிருந்து
விலக வைக்கும்
சுடுகாட்டுச் சாம்பல் பூசிய
உனதுடல்................,
ஏக்கத்திற்கு மேல்
ஏக்கம் கொள்ள வைக்கிறது .-
'பிடியதன் உரு உமை கொள,'
'எனததன் உரு நான் கொள..'..
எனக்கும் கூட
ஓங்காரத்தின் புத்திரனைத் தருவாயா...?
ஒளியினது நாதத்தில் ,
தழைத்த எனதுடல்
மாயைகள் பற்றி
உழல்கிறது .
நான்
சகலனாதலால் .......
மும்மலங்களையும் களைந்து..
மலச் சிக்கலில் இருந்து விடுபட
நார்ச் சத்துத்தா......!
மேரு மலையில்
மீதமிருக்கும் பாச அமுதத்தை
எனக்குத் தா.....,
எனக்கு நித்தியத்துவம்
வேண்டும்...,,
அடக் கடவுளே...........
உனக்கென்ன தான் தெரியும்....,
என்னையும் விட,...............?
முட்டாள்க் கடவுளே
மனிதத்துவம் தெரியுமா உனக்கு...?
அவதாரமெடுத்த கடவுளே
மனிதத்துவம் தெரியுமா உனக்கு..............?
சத்தினி பாதம்,
திருவடி பேறு,
இதெல்லாம்
எந்தக் காலத்து
ஆன்மாக்களுக்காக.......?
பணமூட்டையும்.,
வயிற்றுப் பாட்டையும்
கவனிக்காத
கடவுளே.............
உன்னையே தான்
இன்னமும் நான்அடைய விரும்புகிறேன்.
உன்னையே
கரம் பிடிக்க யனிக்கிறேன்.
என் வார்த்தைகளையும் ,
வார்ப்புடலையும் ,
கொழுந்து விட்டெரீயும்
விடலைத் தீயையும்
உனக்கெனத் தான்
குரு தெட்சிணையாய் ...........
மெதுவாகச் சொல்கிறேன் ,
என் காதல்
ஆலாபனைகளை................
பிறகு , இன்னும் பிறகு....,
என்னை இமய மலைக்கு
கூட்டிச் சென்ற பின்.., சொல்கிறேன்....!
ஐயனே,,,,,,,
தேசீயவாதத்திட்கும் ,
உனக்கும்
என்னது வேறுபாடு...?
அறியாப் பொருள் என்ற
ஆணவம் உன்னிடம் மட்டும்
தகுமா....?
என் நேசம்
எத்தனை ஆகாமியம் என்பது
உனக்கு புரியாதா ....?
கடவுளின் லீலைகளுக்கு பின்னாலும்
லீலைகளுண்டு .
எனக்கும் உண்டு -
எதுவுக்கும் பின்னாலும்..............,
தேய்ந்து போன சாபம்.!
-நிலா-
-21.08.2009-
Friday, October 22, 2010
விமானம் பறப்பது எப்படி?
பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட
சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…
இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை
ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு
A. ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)
B. முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust
C. கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight
D. பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag
Weight=Lift
Drag=Thrust
த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின்
அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால்
விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின்
விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது
விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும்
இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது
காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது,
விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும்
அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக
இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை
அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு
இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது
விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று
அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில்
ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை தேவை எல்லாம் காற்று
யூநிட் கன்வெர்ட்டர் மென்பொருள் (Convertor)
நமக்கு கிடைக்கும் வீடியோக்கள், ஆடியோக்கள் மற்றும்
அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த மென்பொருள்தான்
உதாரணமாக:-
1 கிலோமீட்டர் (Km) =100,000 சென்டி மீட்டர் என்பது போல
Notepad++ ஒரு சிறந்த மென்பொருள்
ஆனால் Notepad++ ல் பின் வரும் பல வசதிகள் உள்ளன:-
Syntax Highlighting and Syntax Folding
WYSIWYG
User Defined Syntax Highlighting
Auto-completion
Multi-Document
Multi-View
Regular Expression Search/Replace supported
Full Drag ‘N' Drop supported
Dynamic position of Views
File Status Auto-detection
Zoom in and zoom out
Multi-Language environment supported
Bookmark
Brace and Indent guideline Highlighting
Macro recording and playback
இந்த அரிய மென்பொருள் முற்றிலும் இலவசமே
உலகத்திலேயே மிகப் பெரிய புகைப்படம்
ஒவ்வொரு படத்தின் exposureம் அதாவது படம் எடுக்க ஆரம்பித்ததில் இருந்து படம்
இவரால் எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் நமது கண்ணுக்குத் தெரியும் மொத்த வானம்!
ஏனெனில் இங்கே தான் வருடத்தின் 11 மாதங்களுக்கு ஒளி மாசுபாடு (light pollution)
சூரியன் மற்றும் சந்திரன் இல்லாத போது தான் மிக இருண்ட வானம் கண்ணுக்குக் கிடைக்கும்.
முதன் முதலில் எடுத்த படம் Canopus என்னும் நட்சத்திரம் ஆகும். ஒவ்வொரு பாகத்தையும்
மொத்தம் 120 மணி நேரங்கள் தான் புகைப்படக் கருவியின் அருகே இருந்து விழித்திருக்கின்றார்
இது இரவில் என்றால் பகலில் இத்தனை படங்களையும் தொகுக்கும் பணியில் இவரது
இது வரை அகண்ட வானை புவியிலிருக்கும் தொலைநோக்கி கொண்டு இத்தனை
முதல் படம் பால்வெளி வீதியை மையமாகக் கொண்டு மொத்த வானையும்
இந்தப் படம் எடுத்தவரின் கண்ணோட்டத்தில், அவர் வியப்பது இந்தப் படத்தில் தெரியும்
இந்த முகவரியை சொடுக்கி மேலும் அறிக ,காண்க :
http://www.sergebrunier.com/gallerie/pleinciel/index-eng.html
இவர் புகைப்படங்களைத் தொகுக்க உதவியவர் Frédéric Tapissier
புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.
காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம்