Saturday, October 23, 2010

அடைகின்ற ஆசையில்...............!


அட.,

நீண்ட நாட்களுக்கு பின்

அவன்..

முறுவலிக்கின்றான்

மீசை நெளிய -

மாபாவம் செய்த

சந்நியாசியைப் போல நான்-கூனிக்

குறுகிப் போனேன்.

துள்ளியது இளமைஎன்றால்...,

பொதி சுமப்பது........................?

சன்மார்க்கத்திலிருந்து

விலக வைக்கும்

சுடுகாட்டுச் சாம்பல் பூசிய

உனதுடல்................,

ஏக்கத்திற்கு மேல்

ஏக்கம் கொள்ள வைக்கிறது .-

'பிடியதன் உரு உமை கொள,'

'எனததன் உரு நான் கொள..'..

எனக்கும் கூட

ஓங்காரத்தின் புத்திரனைத் தருவாயா...?

ஒளியினது நாதத்தில் ,

தழைத்த எனதுடல்

மாயைகள் பற்றி

உழல்கிறது .

நான்

சகலனாதலால் .......

மும்மலங்களையும் களைந்து..

மலச் சிக்கலில் இருந்து விடுபட

நார்ச் சத்துத்தா......!

மேரு மலையில்

மீதமிருக்கும் பாச அமுதத்தை

எனக்குத் தா.....,

எனக்கு நித்தியத்துவம்

வேண்டும்...,,

அடக் கடவுளே...........

உனக்கென்ன தான் தெரியும்....,

என்னையும் விட,...............?

முட்டாள்க் கடவுளே

மனிதத்துவம் தெரியுமா உனக்கு...?

அவதாரமெடுத்த கடவுளே

மனிதத்துவம் தெரியுமா உனக்கு..............?

சத்தினி பாதம்,

திருவடி பேறு,

இதெல்லாம்

எந்தக் காலத்து

ஆன்மாக்களுக்காக.......?

பணமூட்டையும்.,

வயிற்றுப் பாட்டையும்

கவனிக்காத

கடவுளே.............

உன்னையே தான்

இன்னமும் நான்அடைய விரும்புகிறேன்.

உன்னையே

கரம் பிடிக்க யனிக்கிறேன்.

என் வார்த்தைகளையும் ,

வார்ப்புடலையும் ,

கொழுந்து விட்டெரீயும்

விடலைத் தீயையும்

உனக்கெனத் தான்

குரு தெட்சிணையாய் ...........

மெதுவாகச் சொல்கிறேன் ,

என் காதல்

ஆலாபனைகளை................

பிறகு , இன்னும் பிறகு....,

என்னை இமய மலைக்கு

கூட்டிச் சென்ற பின்.., சொல்கிறேன்....!

ஐயனே,,,,,,,

தேசீயவாதத்திட்கும் ,

உனக்கும்

என்னது வேறுபாடு...?

அறியாப் பொருள் என்ற

ஆணவம் உன்னிடம் மட்டும்

தகுமா....?

என் நேசம்

எத்தனை ஆகாமியம் என்பது

உனக்கு புரியாதா ....?

கடவுளின் லீலைகளுக்கு பின்னாலும்

லீலைகளுண்டு .

எனக்கும் உண்டு -

எதுவுக்கும் பின்னாலும்..............,

தேய்ந்து போன சாபம்.!

-நிலா-

-21.08.2009-


No comments:

Post a Comment