Thursday, October 21, 2010

வேண்டாமே வெடிசத்தம்


நாம் எல்லோரும் ஆவலுடன் தீபாவளியை எதிர் நோக்கியிருக்கிறோம் ,புத்தாடை ,பலகாரங்களுடன் ,உறவினர் ,சுற்றத்துடன் மகிழ்ச்சியை பரிமாற்ற காத்து கொண்டிருக்கிறோம் .தீப ஆவளி என்பதே தீபாவளி என்று அழைக்க படுகிறது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் .மின்சார வசதியில்லாத இருண்ட காலத்தில் இருந்த பொழுது ,கார்த்திகையின் அடர் இருளை போக்க ,மனிதர் இரவிலும் பயமின்றி நடமாட இந்த தீப ஆவளி பயன்பட்டது ,ஆனால் இன்றோ பகலினும் மிளிரும் மெர்குரி விளக்குகளை நாம் பொருத்தி இருக்கிறோம் வீதிக்கு வீதி .இந்தியாவின் எந்த மூலையில் திரும்பினாலும் குப்பை கூளங்கள் ,தேசமே எச்சில் தேசமாய் ,வாகன பேரிரைச்சலால் ,ஒலி பெருக்கி இரைச்சலால் மாசுபட்டு கிடக்கிறது .சற்றே சிந்திக்க வேண்டும் நண்பர்களே ஏற்கனவே துல்லியமான ஒலி வேண்டி செல் போன் நிறுவங்களின் அதி அலைவரிசையால் பாதிக்கப்பட்டுள்ள நாம் பட்டாசுகளை கொளுத்தி ஒலி மாசை எற்படுதவேண்டுமா ?அக்கம் பக்கத்தில் இருதய நோயாளிகள் ,வயோதிகர்கள் ,குழந்தைகள் ,மெல்லிதயம் படைத்தவர்கள் என்று எதனை பேர் உங்கள் வெடி சத்தினால் திடீரென தாக்க படுகிறார்கள் .உங்கள் ஒருவரின் மகிழ்ச்சிக்காக ஒரு தெருவையே அதிர வைப்பது நியாயமா ? தீப ஒளிகளை மட்டும் ஏற்றி உங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொள்ளக்கூடாதா ? அது போக ஒரு மனிதனின் மரணத்தை இந்த தேசமே இப்படியா கொண்டாடுவது .சரி அது கூட உங்கள் இழ்டம் ,முடிந்தவரை மற்றவரை துன்புறுத்தாமல் ,மிரள செய்யாமல் ,மென்மையாய் சத்தமில்லா,பட்டாசு வெடித்து குப்பையில்லா ஒரு தீபாவளியை கொண்டடுங்களேன் .

1 comment:

Unknown said...

• பண்டிகைகளின் ராஜா தீபாவளி.. பண்டிகைகள் மனமகிழ்ச்சிக்காகவே.. தீபாவளியன்று பாருங்கள்.. வெளி ஊரில் படிக்கும் அல்லது வேலை பார்க்கும் மகன்,மகள்.. என்ன வேலை இருந்தாலும் ஊருக்கு வருவார்கள்.. குடும்பத்தில் எத்தனை துன்பம் இருந்தாலும்.. அதை எல்லாம் மறந்து மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.. குழந்தைகள் வெடிவெடிக்கும்.. புது மணத்தம்பதிகளின் மகிழ்ச்சியே வேறு.. பெற்றோர்கள் குழந்தைகளின் மகிழ்ச்சியைப் பார்த்து மகிழ்வார்கள்... நாமும் வெடிவெடித்து குழந்தைகளாவோம்.. தீபாவளி குடும்பம் மற்றும் நண்பர்களுடனான மகிழ்ச்சிக்கு ஒரு அழகான வழி.. சிவகாசியும் சுற்றியுள்ள கிராமங்களும் தீபாவளியை நம்பியே பிழைத்து வருகின்றன.. ஒரு நாள் வெடிச்சத்தமும் குப்பையும்.. பொறுத்துக்கொள்ளுங்களேன்..!

Post a Comment