Thursday, October 21, 2010

அடக்கம் வேண்டும் சீமான் வீட்டு பிள்ளையே

என்னது திருமா காங்கிரஸ் தயவில் ஜெயித்தாரா ? ஹா ! ஹா , எங்கள வச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலியே ! தனித்து நின்று தனது தனிபெரும்பான்மையை நிரூபித்தவர் திருமா ! வரலாறு தெரியுமா உமக்கு .திருமா ஜெயித்தது அவரின் இதனை வருட மக்கள் பணியினால் .அவர் ஒன்றும் சீமான் வீட்டு பிள்ளை இல்லை அப்பன் தயவில் பதவிக்கு வருவதற்கு .உழைப்பு ,அறிவு ,எளிமை ,நேர்மை ,தியாகம் ,இவைகள்தான் திருமாவின் வெற்றி .அவர் யாருக்கையா குரல் கொடுத்துட்டாரு , உன்னை மாதிரி தமிழ் பேசுற ஒரு தமிழன அநியாயமா கொல்லதிங்கன்னுதானே குரல் கொடுத்தார் .எங்களின் கொள்கையே அடக்குமுறைகளை அடக்கி காட்டுவதுதான் .தமிழன் மீதான அடக்கு முறையை பதவிக்கு பயந்துகிட்டு நீங்கதான் கேக்கள, கேக்கறவங்கலயாவது ,கேக்க விடுங்கய்யா.சொல்ல போனா இந்த பாரிய இன அழிப்புக்கு எதிர்ப்பு குரல் கொடுத்து ,நீங்களும் உங்கள் அப்பாவும்தான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் ,இந்நேரம் செய்து விட்டு வந்திருக்க வேண்டும் .என்ன பண்றது பதவி ஆசை ,தமிழினம் உங்களை மன்னிக்காது கார்த்தி .நீங்க மட்டும் மத்திய அமைச்சர் பையன் ,அரசியல் குழு உறுப்பினர் என்கிற வளையத்தை தூக்கி போட்டுட்டு பேசி பாருங்களேன் .எல்லாம் பணமும் பதவியும் கொடுக்கிற தைரியம் .கடைசியில் ஆட்ட கடிச்சி ,மாட்ட கடிச்சி .திருமாவையே தூற்ற ஆரம்பிச்சுடீங்க கார்த்திக் .நாவடக்கம் தேவை கார்த்தி , நூற்றாண்டு பழமை வாய்ந்த காங்கிரஸ் தமிழ் நாட்ல ஒண்ணும் ----ங்க கூட முடியலையே அத யோசிச்சு பிரயோஜனமா ஏதாவது பண்ண பாருங்க

1 comment:

PRINCENRSAMA said...

அதிகப் பிரசங்கி
அதிகப் பிரசங்கிகள் என்ற சொல்லை நாம் சிறுவயதில் இருந்தே கேட்டிருக்கிறோம். வயதை மீறிய வார்த்தைகளைப் பேசுவது, எதையும் சரியாகப் புரிந்துகொள்ளாமல் பேசுவது,தகவல்களை, செய்திகளைத் தெரிந்துகொள்ளாமல் பேசுவது என இந்த அரைகுறைப் பேச்சைத்தான் அதிகப்பிரசங்கித் தனம் என்று சொல்வார்கள்.
இப்படித்தான் அதிகப் பிரசங்கியாகப் பேசியுள்ளார் புதிய அரசியல்வாதி கார்த்தி சிதம்பரம்.
மேலும் படிக்க... http://manimagan.blogspot.com/2010/10/blog-post_14.html

Post a Comment